
ஆப்ரேஷன் "ரோலக்ஸ்".. விவசாயிகளை அச்சுறுத்தி வந்த காட்டு யானை ஊசி செலுத்தி பிடித்தனர் வனத் துறையினர்
கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருப்பதால் மலையடிவார கிராமங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும், முக்கியமாக நரசிபுரம், கெம்பனூர், தொண்டாமுத்தூர், மருதமலை மற்றும் தடாகம் சுற்று வட்டாரத்தில் ஒரு ஆண் காட்டு யானை ஊருக்குள் அடிக்கடி வந்து கொண்டு இருந்தது.விலை நிலங்கள், வீடுகள் சேதப்படுத்துவதுடன் அவ்வப் போது மனிதர்களையும் தாக்கி கொள்வதாக புகார் எழுந்தது. அந்த யானையை உள்ளூர் மக்கள் ரோலக்ஸ் என்று பெயரிட்டனர்.