
அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள சாந்தி திரையரங்கில் நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள கொம்பு சீவி திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்களுடன் படம் பார்ப்பதற்காக இன்று மாலை சாந்தி திரையரங்கிற்கு இயக்குனர் பொன்ராம் நடிகர் சண்முக பாண்டியன் மற்றும் பணக் குழுவினர் வந்திருந்தனர், அப்போது தேமுதிக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகமாக ஜமாப் அடித்து, பட்டாசு வெடித்தும்,ஆராத்தி எடுத்தும் வரவேற்றனர்.அதற்கு முன்னதாக ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் இசைக்கு ஏற்றவாறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக நடனமாடினர்.