Google Pixel 10 பிளிப்கார்ட் சேலில் கூகுள் பிக்சல் 10 போனுக்கு ரூ.14,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய முழு விவரம் இதோ.
கூகுளின் லேட்டஸ்ட் ப்ரீமியம் ஸ்மார்ட்போனான 'கூகுள் பிக்சல் 10' (Google Pixel 10) வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது ஒரு பொன்னான நேரம். பிளிப்கார்ட் தளத்தில் தொடங்கியுள்ள 'இயர் எண்ட் சேல்' (Year-End Sale) விற்பனையில், இந்த போன் இதுவரை இல்லாத அளவு குறைந்த விலையில் கிடைக்கிறது. டிசம்பர் 5 ஆம் தேதி தொடங்கியுள்ள இந்த சிறப்பு விற்பனை டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விற்பனையில் கூகுள் பிக்சல் 10 மட்டுமின்றி பல்வேறு கேட்ஜெட்களுக்கும் அதிரடி விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை மற்றும் வங்கி சலுகைகள்
12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட கூகுள் பிக்சல் 10 போனின் அசல் விலை ரூ.79,999 ஆகும். ஆனால், தற்போது பிளிப்கார்ட் சேலில் ரூ.7,000 குறைக்கப்பட்டு ரூ.72,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி, எச்டிஎப்சி (HDFC) வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு கூடுதலாக ரூ.7,000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மொத்தமாக ரூ.14,000 வரை சேமிக்க முடியும். மற்ற வங்கி கார்டுகளுக்கு 5% தள்ளுபடியும் (ரூ.4,000 வரை), பழைய போனை மாற்றிக்கொள்ளும் எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூ.68,050 வரையும் வழங்கப்படுகிறது.
டிஸ்பிளே மற்றும் பிராசஸர்
கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனானது 6.3 இன்ச் அக்யூட்டா ஓஎல்இடி (Acuta OLED) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 nits பீக் பிரைட்னஸ் ஆதரவுடன் வருகிறது. திரையின் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 2 வழங்கப்பட்டுள்ளது. செயல்திறனைப் பொறுத்தவரை, இது அதிவேகமான டென்சர் ஜி5 (Tensor G5) சிப்செட் மூலம் இயங்குகிறது.
கேமரா அம்சங்கள்
புகைப்பட பிரியர்களுக்காகவே இந்த போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 10.8 மெகாபிக்சல் டெலிபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்காக 10.5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரி மற்றும் இதர வசதிகள்
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தில் செயல்படுகிறது. நீண்ட நேர பயன்பாட்டிற்காக இதில் 4,970mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இது 30W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும், IP68 வாட்டர் ப்ரூஃப் ரேட்டிங், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் இ-சிம் (eSIM) சப்போர்ட் போன்ற பிரீமியம் வசதிகளும் இதில் உள்ளன.

