தமிழகத்தில் கோடை வெயில் அதிகரிக்க, மக்கள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு படையெடுக்கின்றனர். உதகையில் மலர் கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன, மேலும் ரயில்வே போலீசார் பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர்.
Ooty security assistance: Attention tourists! தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக ஈரோடு கரூர் மாவட்டங்களில் 100 டிகிரியை வெப்பநிலை தாண்டியுள்ளது. மேலும் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வானது தொடங்கியுள்ளது. எனவே தேர்வு முடிவடைந்து கோடைகால விடுமுறை அளிக்கப்படவுள்ளது. அந்த வகையில் இயற்கையாக மற்றும் குளுமையான இடங்களை தேடி மக்கள் செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு தயாராகி வருகின்றனர்,
ஊட்டிக்கு படையெடுக்கும் மக்கள்
எனவே மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகையில் எப்போதும் போல் மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கிடும் வகையில் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளனர். உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகமாக ஊட்டி மலை ரயிலில் பயணிக்கவே விரும்புவார்கள். அந்த வகையில் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை மலை ரயில் இயக்கப்படுகிறது. காலை மற்றும் மாலை வேளைகளில் ஊட்டியில் இருந்து மலை ரயில் புறப்படுகிறது.
அவரச உதவிக்கு தொடர்புகொள்ள
இந்த நிலையில் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில், ரயில்வே போலீசார் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறார்கள். பயணிகளுக்கு புரியும் விதமாக பல்வேறு மொழிகளிலும் அச்சிடப்பட்ட நோட்டீஸ் வழங்கப்படுகிறது. அவசர உதவி தேவைக்கு 1512 GRP Railway number என்ற தொலைப்பேசி எண் வழங்கப்பட்டது. இதேபோல 139 RPF ஆகிய இலவச தொலைப்பேசி எண்களை வழங்கி அவசர தேவைக்கு உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் சுற்றுலா பயணிகளை போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
