
அண்ணா நகரில் தனது வாக்கினைப் பதிவு செய்தார் நடிகர் விஷால்!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திரையுலகினர் பலரும் ஆர்வத்துடன் தங்களது வாக்கினைப் பதிவு செய்து வருகின்றனர்.அந்த வகையில், நடிகர் விஷால் அவர்கள் சென்னை அண்ணா நகரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாற்றத்திற்காகவும் கடமைக்காகவும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.