மன நிம்மதியுடன் வாழ நினைப்பவர்கள் பின்பற்ற வேண்டிய சில எளிய 7 விஷயங்கள் குறித்து இங்கு காணலாம்.
என்னதான் கை நிறைய பணம் சம்பாதித்தாலும் மனதில் நிம்மதி இல்லை என்றால் எல்லாமே வேஸ்ட்தான். மன நிம்மதியுடன் வாழ வேண்டும் என்பது தான் அனைவரது ஆசை. ஆனால் ஒவ்வொருவரின் மனநிலை, வாழ்க்கை முறை, பொறுப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்து அது மாறுபடும். இருந்தபோதிலும் நீங்கள் மன நிம்மதியாக வாழும் வழிகளை தேடுகிறீர்கள் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. ஆம், இங்கு கொடுக்கப்பட்டுள்ள 7 எளிய வழிகளை பின்பற்றுங்கள். மன நிம்மதியாக வாழ்வீர்கள்.
மனநிம்மதியுடன் வாழ்வதற்கான 7 வழிகள் :
1. மூச்சுப் பயிற்சி செய்தல் :
மனம் நிம்மதியாக இருக்க தினமும் சில நிமிடங்கள் மூச்சுப் பயிற்சி, தியானம், யோகா செய்யுங்கள். அதுபோல உங்களை பிறருடன் ஒருபோதும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். மேலும் மனதில் இருக்கும் தேவையற்ற கவலைகளை நம்பிக்கைகுறியவர்களிடம் பகிரவும் அல்லது ஒரு தாளில் எழுதி கவலையை குறைத்துக் கொள்ளுங்கள்.
2. அதிக பொறுப்பால் மன பாரம்!
அழுத்தம் தரும் உறவுகள் மற்றும் அதிக பொறுப்புகள் போன்றவற்றை முடிந்தவரை குறைத்துக் கொண்டால் மனம் நிம்மதியாக இருக்கும்.
3. ஆரோக்கியமான உடல்நலம் :
மனதில் நிம்மதி வேண்டுமானால் முதலில் உங்களது உடல் நலத்தை ஆரோக்கியமாக வையுங்கள். இதற்கு நல்ல தூக்கம், ஆரோக்கியமான உணவு தினமும், ஏதாவது ஒரு உடற்பயிற்சி ஆகியவை மிகவும் அவசியம். உடல்நலம் எப்படி இருக்கிறதோ அப்படி தான் மனநிலையும் இருக்கும்.
4. நல்ல சவகாசம் :
நீங்கள் செய்யும் தவறுகளை உரிமையுடன் கண்டிக்கும் நபருடன் பழகுங்கள் பிறகு ஒருபோதும் தவறை செய்ய மாட்டீர்கள். அதுபோல எப்போதுமே எதிர்மறையாக சிந்திக்கும் நபர்களிடமிருந்து விலகி இருங்கள்.
5. உங்களை நீங்களே மன்னிக்கவும்!
இது ஒவ்வொரு நபருக்கும் மிகவும் முக்கியமானது. அதாவது கடந்த கால தவறுகளை நினைத்து உங்களை நீங்களே அதிகமாக குற்றம் சாட்ட வேண்டாம். ஒவ்வொரு நாளையும் புதிதாக தொடங்குங்கள். இதனால் மனதில் நிம்மதி கிடைக்கும்.
6. பண விஷயத்தில் நிம்மதி!
நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அதில் மன நிறைவுடன் வாழ கற்றுக் கொள்ளுங்கள். அதுபோல தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது.
7. எதிர்பார்ப்பில் கவனம் :
எல்லா விஷயத்திலும் நீங்கள் பர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அதுபோல பிறரும் உங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தேவையில்லை. இப்படி நடந்து கொண்டால் மனம் அமைதியாக இருக்கும்.


