கடந்த 2004ம் ஆண்டு ரூ.88 கோடியாக இருந்த பாஜகவின் வங்கி இருப்பு 2024ம் ஆண்டில் ரூ.10107 கோடியாக உயர்ந்திருப்பதாக காங்கிரஸ் பொருளாளர் அஜய் மக்கன் அம்பலப்படுத்தி உள்ளார்.
தேர்தல் சீர்திருத்தப் பணிகள் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. அப்போது பேசிய காங்கிரஸ் பொருளாளரும், எம்பியுமான அஜய் மக்கன், “நமது நாட்டை ஜனநாயகத்தின் தாய் என அழைத்தாலும் நாட்டின் தேர்தல்களில் அனைவருக்கம் சமமான போட்டிக்களம், நம்கத்தன்மை, வெளிப்படைத் தன்மை ஆகிய அடிப்படைக் கூறுகள் தற்போது திட்டமிட்டு சீர்கலைக்கப்பட்டுள்ளன.
கணினி மூலம் சரிபார்க்கப்படும் வாக்காளர் பட்டியலை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. வாக்கச்சாவடியில் பதிவாகும் சிசிடிவி பதிவுகள் வெறும் 45 நாட்களில் அழிக்கப்படுகின்றன. நாட்டு மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய தேர்தல் ஆணையம், சந்தேகங்களை ஏற்படுத்தக் கூடிய பணிகளில் ஈடுபடுகிறது.
எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் நிதி கிடைப்பதை தடுக்க மத்திய அரசு பல்வேறு தந்திரங்களைக் கையாள்கிறது. கடந்த 2004ம் ஆண்டு ரூ.88 கோடியாக இருந்த பாஜகவின் வங்கி இருப்புத் தொகை 2024ம் ஆண்டில் ரூ.10,107 கோடியக உயர்ந்திருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் வங்கித் தொ ரூ.38 கோடியில் இருந்து ரூ.134 கோடி என்ற அளவில் தான் அதிகரித்து்ளது. காங்கிரஸ் கட்சக்க நன்கொடைவழங்கவதைத் தடுக்க தொழில் அதிபர்கள் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினரை மத்திய அரசு ஏவுகிறது. இதுபோன்ற நிர்வாகத்தின் கீழ் ஜனநாயகம் எப்படி வளரும்? என்ற கேள்வி எழுப்பி உள்ளார்.


