எல்லையில் இந்தியாவின் பாதுகாப்புக்கு முக்கிய பங்கு வகித்து வரும் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியவர் பெங்களூருவை சேர்ந்த விஞ்ஞானிடாக்டர் பிரஹ்லாத் ராம் ராவ். இவர் யார்? என்பது குறித்து பார்ப்போம்.

Bengaluru scientist who created Akash air defense system: இந்தியா மீது பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்கும் நிலையில், பாகிஸ்தானில் இருந்து வரும் ஏவுகணைகளைத் தடுப்பதில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இதை பெங்களூரைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் உருவாக்கியது என்பது பெருமைக்குரிய விஷயமாகும். 

ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு

பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் பிரஹ்லாத் ராம் ராவ் (78) இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) விஞ்ஞானியாகப் பணியாற்றிய காலத்தில், ஆகாஷ் திட்டத்தின் இளம் திட்ட இயக்குநராக இருந்தார். இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களே இந்தப் பொறுப்பை அவருக்கு வழங்கினார்

இந்திய விஞ்ஞானி டாக்டர் பிரஹ்லாத் ராம் ராவ்

ஹைதராபாத்தில் உள்ள பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஆகாஷ் அமைப்பு, 15 ஆண்டுகால கடின உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. இன்று நாட்டின் பாதுகாப்பிற்கு ஆகாஷ் நிற்கும் நிலையில், டாக்டர் ராம் ராவ், ‘எனது படைப்பு துல்லியமாகச் செயல்பட்டு எதிரி விமான இலக்குகளை வீழ்த்துவதைப் பார்ப்பது என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம். அது எதிர்பார்ப்புகளுக்கு மீறிய அற்புதமான செயலைச் செய்கிறது’ என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். டிரோன்கள், ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள் மட்டுமல்ல, அமெரிக்காவின் F-16 போர் விமானங்களையும் தடுக்கக்கூடிய ஆகாஷ் அமைப்பை நாட்டின் பாதுகாப்பிற்குப் பயன்படுத்த ராணுவம் தயங்கியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

யார் இந்த டாக்டர் பிரஹ்லாத்?

1947 இல் பெங்களூரில் (அப்போதைய மெட்ராஸ் மாகாணம்) பிறந்த பிரஹ்லாத், பெங்களூரு பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் பட்டமும், இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) விமானப் பொறியியல் மற்றும் விண்வெளிப் பொறியியல் பட்டமும் பெற்றார். 1971 இல் DRDOவில் விஞ்ஞானியாகப் பணியில் சேர்ந்த ராம் ராவ், பின்னர் 1997 இல் அதன் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார். புனே DIAT மற்றும் பெங்களூரு சுவாமி விவேகானந்த யோகா ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார். இப்போது ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு நாட்டின் பாதுகாப்புக்கு முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில் இதனால் டாக்டர் பிரஹ்லாத் பெருமிதம் அடைந்துள்ளார்.