ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவருக்கு பூச்சி கலந்த உணவு வழங்கப்பட்டதாக அந்தப் பயணி புகார் கூறியுள்ளார்.

மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பூச்சி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியு்ள்ளது.

மும்பையில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா AI671 விமானம் நண்பகல் 11 மணி அளவில் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இதில் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்த மஹாவீர் ஜெயின் என்பவர் விமானத்தில் உணவுக்கு ஆர்டர் கொடுத்திருந்தார். அவருக்கு சாண்ட்விச், முட்டைக்கோஸ், சிக்கன் டிக்கா ஆகியவை உணவாக வழங்கப்பட்டன.

தன்னை விட வயதில் மூத்தவரை காலில் விழா வைத்து ஆனந்தப்பட்ட ஆனந்த் அம்பானி... வச்சு செய்யும் நெட்டிசன்கள்! வீடியோ

உணவைப் பெற்றுக்கொண்ட மஹாவீர் அதில் பூச்சி ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறார். உடனடியாக அதனை வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுவிட்டார். அவரது ட்வீட் வைரலானதைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனம் அவரது ட்வீட்டுக்கு பதில் கூறியுள்ளது.

Scroll to load tweet…

"எங்கள் விமானத்தில் பயணிக்கும்போது இப்படி நடத்தது வருத்தம் அளிக்கிறது. சுகாதாரம் இல்லாத உணவு வழங்கப்பட்டதற்கு மன்னித்து கோருகிறோம். இதைப்போல மறுபடியும் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுப்போடும்" என்று ஏர் இந்தியா நிறுவனம் மஹாவீருக்கு பதில் அளித்துள்ளது.

இதேபோன்ற சம்பவங்கள் விமானங்களில் அடிக்கடி நடக்கின்றன. கடந்த மாதம் ஏர் விஸ்தாரா விமானத்தில் நிகுல் சோலங்கி என்ற பயணிக்கு அளிக்கப்பட்ட பேக் செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக அந்தப் பயணி ட்விட்டரில் பதிவிட்டார். அவரது பதிவுக்கு விரைந்து பதில் அளித்த விமான நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க முன்வந்தது.

ஆணழகன் போட்டி: பிரட் தொண்டையில் சிக்கி 21 வயது பாடிபில்டர் பலி