Kuppaimeni Ilai Benefits : குப்பைமேனி இலையின் மருத்துவ பயன்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குப்பைமேனி இலை காடுமேட்டில் எங்கும் கிடைக்கும். இது சின்ன செடியாக வளரும். இதன் இலையானது பச்சை நிறத்தில் முக்கோண வடிவில் அரும்பரும்பாக இருக்கும். இப்போது இந்த பதிவில் குப்பைமேனி இலையின் நன்மைகள் என்னவென்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

குப்பைமேனி மருத்துவ குணங்கள்:

- குப்பைமேனி இலையானது நெஞ்சு சளியை நீக்கும், இருமலை போக்கும், விஷக்கடி, வாதம், ஆஸ்துமா, குடற்புழு, மூட்டு வலி, தலைவலி போன்ற நோய்களை குணப்படுத்தும் பண்புகளை கொண்டது. 

- குப்பைமேனியின் வேரானது மலமிளக்கியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

- குப்பைமேனி வேரை தண்ணீரில் கொதிக்க வைத்து அதன் நீரை குடித்தால் உடலில் இருக்கும் பூச்சிகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

- குப்பைமேனி இலையுடன் சிறிதளவு மஞ்சள் கலந்து அதை உடல் முழுவதும் பூசி பிறகு குளித்தால் சரும பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

இதையும் படிங்க: தினமும் வெறும் வயித்துல '7' கறிவேப்பிலை சாப்பிடுங்க.. உடல்ல 'இந்த' விஷயம் நடக்கும்!

குப்பைமேனி இலையின் நன்மைகள்:

- குப்பைமேனி இலையின் சாற்றை குடித்தால், வயிற்றுப்புழுவை வெளியேறும். குழந்தைகளுக்கு 10 மில்லியும், பெரியவர்களுக்கு 15 மில்லி வரை குடிக்கலாம்.

- மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் குப்பைமேனி இலையின் சாற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் உடனே சரியாகிவிடும்.

- சொறி சிரங்கு போன்ற சரும பிரச்சனை இருந்தால் குப்பைமேனி இலையின் சாட்டை எடுத்து சருமத்தின் மீது தடவி வந்தால் விரைவில் குணமாகும்.

- சொறி அல்லது தடுப்புகள் மீது குப்பைமேனி இலையை அரைத்து அதனுடன் சிறிதளவு உப்பு கலந்து அந்த பேஸ்ட்டை தடுப்புகள் மீது தடவினால் சரும பிரச்சனைகள் குணமாகும்.

- கண் வலி, கண் தொற்று, காது வலி ஆகியவற்றிற்கு குப்பைமேனி இலையில் பற்று போட்டால் வலி குணமடையும். 

- தலைவலி அதிகமாக இருக்கும் போது குப்பைமேனி சாற்றை அந்த இடத்தில் தடவி மசாஜ் செய்தால் தலைவலி விரைவில் குணமாகும்.

- தீக்காயங்கள் மற்றும் புண்களை குணப்படுத்த குப்பைமேனி இலையை நசுக்கி காய்கள் மீது வைத்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

- கீழ்வாத பிரச்சனையில் இருந்து விடுபட குப்பைமேனி இலையில் இருந்து சாற்றை எடுத்து அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.

இதையும் படிங்க: 1 கிளாஸ் அரச இலை தண்ணீர் போதும்.. பல நோய்களையும் விரட்டி அடிக்கும்!

முகத்திற்கு குப்பைமேனி இலையின் நன்மைகள்:

- பெண்களின் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்ற குப்பைமேனி பயன்படுத்தலாம். இதற்கு குப்பைமேனி இலையுடன் விரலி மஞ்சள் சேர்த்து அரைத்து இரவு தூங்கும் முன் முகத்தில் தடவவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் உதிர்ந்து விடும்.

- முகத்தில் இருக்கும் பருக்களை அகற்ற குப்பைமேனி இலையின் சாற்றுடன் கற்றாழை ஜெல் மற்றும் மஞ்சள் கலந்து அதை முகத்தில் தடவினால் பருக்கள் குறைய ஆரம்பிக்கும்.

குப்பைமேனி ஃபேஸ் பேக்:

குப்பைமேனி இலையை ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம். இதற்கு 15 குப்பைமேனி இலைகள், 15 புதினா இலைகள், சிறிதளவு துளசி இலைகள், வேப்பிலை மற்றும் தயிர், பசும்பால் வைட்டமின் ஈ மாத்திரை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் இலைகளை நன்றாக சுத்தம் செய்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் தயிர் வைட்டமின் ஈ மாத்திரை சேர்த்துக் கொள்ளுங்கள் அந்த பேச இப்பொழுது உங்களது முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து சூடான நீரில் முகத்தை கழுவும் இந்த ஃபேஸ் பேக் உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், சுருக்கங்களை நீக்கும் மற்றும் முகத்திற்கு பொலிவை கொடுக்கும்.