உடல் எடையை வேகமாக குறைக்க எந்த கீரை சாப்பிட வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

உடல் பருமனால் தற்போது பலரும் அவதிப்படுகிறார்கள். எனவே, எடையை வேகமாக குறைக்க கடினமான உடற்பயிற்சி, தீவிரமான டயட் என்று உடலை வறுத்திக்கொள்கிறார்கள். ஆனால் உடல் பருமனாக இருந்தாலும் சிலர் சோம்பேறித்தனமாக இருப்பார்கள். அத்தகையவர்களுக்காக கஷ்டம் இல்லாமல் உடல் எடையை விரைவாக குறைக்க வழி ஒன்று உள்ளது தெரியுமா?

ஆம், உடல் எடையை மிக வேகமாக குறைக்க இந்த ஒரு கீரையை மட்டும் சாப்பிட்டால் போதும். நீங்கள் எதிர்பார்க்காத பல நன்மைகளையும் பெறுவீர்கள். அதுதான் பசலை கீரை.

பசலைக்கீரை:

பசலைக் கீரை நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மூலமாககும். இது பல ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றது. இந்தக் கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்புச்சத்து, கால்சியம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் கலோரிகள் குறைவாக உள்ளதால் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த கீரை சிறந்த தேர்வாகும்.

எடையை குறைக்க பசலைக்கீரை எவ்வாறு உதவுகிறது?

1. கலோரி குறைவு:

எடையிலுக்கு பசலைக் கீரை பெரிதும் உதவுகிறது ஏனெனில் இதன் குறைந்த கலோரி உள்ளடக்கம் நமக்கு மிகவும் நன்மை பயக்கும். அதாவது ஒரு கப் பசலைக் கீரையில் சுமார் 7 கலோரிகள் மட்டுமே உள்ளதால், எடை இழப்புக்கு இது எவ்வளவு பங்களிக்கிறது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இந்தக் கீரையில் கலோரிகள் குறைவாக இருந்தாலும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மைகளை வழங்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

2. நார்ச்சத்து:

பசலைக்கீரையில் கலோரிகள் குறைவாக இருந்தாலும், இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இது சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் இது சாப்பிடுவதன் மூலம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதனால் அதிகமாக உணவு சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. ஆகவே இந்த கீரையை சாப்பிடுவதன் மூலம் எடையை சுலபமாக கட்டுப்படுத்தலாம்.

எடையை குறைக்க பசலைக் கீரையை எப்படி சாப்பிட வேண்டும்?

எடை இழப்புக்கு பசலைக் கீரையை உணவுகளில் எப்படி வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். இந்தக் கீரையை வெறும் கறி சமைப்பதற்கு மட்டுமல்லாமல் ஸ்மூத்திகள், சூப்கள், சாலட்கள் போன்றவற்றில் கூட பயன்படுத்தலாம். இந்தக் கீரையை உங்களது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எடை குறைவது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் பெறலாம்.

பசலைக்கீரை நன்மைகள்;

பசலைக் கீரையில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் உடலில் உள்ள ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடும். உடலில் இருக்கும் திசுக்கள் சேதமடையாமல் பாதுகாக்கும், வீக்கத்தை குறைக்கும், ஆரோக்கியமான வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். இன்னும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.