இரத்த கட்டை சரிசெய்யும் சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நமது உடலில் எங்காவது அடிப்படும் போது அங்கு இரத்தம் உறைந்து இரத்த கட்டு ஏற்படும். ரெண்டு மூன்று நாட்கள் கழித்து அந்த இடம் கருப்பு நிறமாக மாறி இருக்கும். இதை ஆரம்பத்திலேயே சரியாக கவனிக்காமல் விட்டால் பின் நாளில் பெரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும். எனவே, இரத்த கட்டை சரிசெய்ய சில வீட்டு வைத்தியங்கள் உதவும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இரத்த கட்டை சரிசெய்யும் வீட்டு வைத்தியங்கள் :
1. புளியும் கல் உப்பும்..
சமையலுக்கு பயன்படுத்தும் புளி இரத்தக்கட்டை குணமாக உதவுகிறது. இதற்கு சிறிதளவு புளியுடன் சிறிதளவு கல் உப்பை சேர்த்து நன்கு பிசைந்து அதை இரத்தக்கட்டு இருக்கும் இடத்தில் பற்று போல போட்டு வந்தால் இரத்தக்கட்டு கொஞ்சம் கொஞ்சமாக குணமாகும்.
2. மஞ்சள் :
இரத்தக்கட்டை குணமாக்க மஞ்சளில் சிறிதளவு சூடான நீரில் கலந்து அந்த பேஸ்ட்டை ரத்தக்கட்டு இருக்கும் இடத்தில் தடவி கட்டு போடவும். தினமும் இப்படி செய்து வந்தால் விரைவில் ரத்த கட்டு குணமாகிவிடும்.
3. ஆமணக்கு மற்றும் நொச்சி :
இதற்கு ஆமணக்கு மற்றும் நொச்சி இலைகளை விளக்கெண்ணையில் சேர்த்து வதக்கி பிறகு அந்த இலைகளை ஒரு வெள்ளை துணியில் கட்டி இரத்தக்கட்டு ஏற்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் ரத்தக்கட்டு சரியாகும்.
4. அமுக்கிராங் சூரணம் :
இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை இளம் சூட்டில் இருக்கும் பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால் இரத்த கட்டு கரையும்.
5. இரத்த பால் :
சித்த மருந்து கடைகளில் இது கிடைக்கும் இதை வாங்கி தண்ணீரில் கலந்து அந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் ரத்த கட்டு குறையும்.
6. கருஞ்சீரகம் :
கருஞ்சீரகப் பொடியை கால் ஸ்பூன் அளவு எடுத்து அதை ஒரு துணியில் போட்டு கட்டி பொடி அரிசி கஞ்சியில் போட்டு வேகவைத்து குடித்து வந்தால் ரத்த கட்டு குணமாகும்.
7. வெள்ளரிக்காய் :
தினமும் ஒரு வெள்ளரிக்காய் துண்டை இரத்தக்கட்டு ஏற்பட்டிருக்கும் இடத்தில் வைத்து வந்தால் இரத்த கட்டு விரைவில் குணமாகும்.


