தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர ஆளிவிதையை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

ஆளிவிதையில் புரதம், நார்ச்சத்து, ஒமேகா-3 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முடியை வலுவாக்கவும், முடி உதிர்வைக் கட்டுப்படுத்தவும், முடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஆளிவிதை உதவுகிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஆளிவிதை முடி உதிர்வைத் தடுக்கிறது. இது உச்சந்தலையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

ஆளி விதைகளில் காணப்படும் லிக்னான்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்ட நன்மை தரும் தாவர கலவைகள். இவை முடி சேதமடைவதிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. இது ஆரோக்கியமான உச்சந்தலை மற்றும் முடிக்கு வழிவகுக்கிறது. முடி முக்கியமாக கெரட்டின் என்ற புரதத்தால் ஆனது.

முடியின் வலிமை மற்றும் உறுதிக்கு காரணமான புரதம் ஆளிவிதையில் ஏராளமாக உள்ளது. ஆளி விதைகளில் வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் பி வைட்டமின்கள் உள்ளன. இவை அனைத்தும் முடியின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க முக்கியமானவை. வைட்டமின் ஈ உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆளிவிதையை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அந்தத் தண்ணீரால் தலையை நன்கு அலசவும்.

முடி வளர்ச்சிக்கு ஆளி விதையை பயன்படுத்தும் முறைகள் :

ஆளி விதை ஹேர் ஜெல் :

இதற்கு 1/4 கப் ஆளி விதைகளை இரண்டு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். ஜெல் போன்ற பதம் வந்தவுடன் அதை வடிகட்டி ஜ ஜெல்லை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த ஜெல்லை உச்சந்தலையில் தடவி சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு எப்போதும் போல குளிக்கவும். இது தலைமுடிக்கு பளபளப்பையும், பட்டு போல மென்மையையும் கொடுக்கும்.

ஆளிவிதை எண்ணெய் மசாஜ் :

ஆளிவிதையை எண்ணெயை உச்சந்தலையில் தடவி மெல்லமாக மசாஜ் செய்யவும். 15 முதல் 30 நிமிடங்கள் ஊறவைத்துவிட்டு பிறகு ஷாம்பு போட்டு குளிக்கவும். இப்படி செய்தால் உச்சந்தலையை ஈரப்பதமாக வைக்கும், உரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மற்றும் தலை முடியை வலுப்படுத்தும்.

ஆளி விதை ஹேர் மாஸ்க் :

ஆளிவிதை ஜெல், தயிர், கற்றாழை ஜெல் ஆகியவற்றை நன்கு கலந்து தலையில் தடவவும். இந்த பேக்கை 15 நிமிடங்கள் தலையில் வைத்திருக்கவும். இந்த மாஸ்க்கை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி 15-20 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் கழுவவும்.