MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs AUS 2nd T20: ஆஸ்திரேலியா அபார வெற்றி..! SKY செய்த தவறு! இந்தியாவின் தோல்விக்கு இதுதான் காரணம்!

IND vs AUS 2nd T20: ஆஸ்திரேலியா அபார வெற்றி..! SKY செய்த தவறு! இந்தியாவின் தோல்விக்கு இதுதான் காரணம்!

IND vs AUS 2nd T20: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. கேப்டன் சூர்யகுமார் செய்த தவறுகள் என்ன? இந்தியா தோல்விக்கு காரணம் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Oct 31 2025, 05:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
IND vs AUS 2nd T20
Image Credit : Getty

IND vs AUS 2nd T20

மெல்போர்னில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 18.4 ஓவரில் வெறும் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முன்னணி பேட்ஸ்மேன்கள் சுப்மன் கில் (5), சஞ்சு சாம்சன் (2), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (1), திலக் வர்மா (0), அக்சர் படேல் (7) விரைவில் அவுட் ஆனார்கள்.

24
ஜோஸ் ஹேசில்வுட் மேஜிக் பவுலிங்
Image Credit : X/iMitchOwen

ஜோஸ் ஹேசில்வுட் மேஜிக் பவுலிங்

ஆனால் தனி ஆளாக போராடிய அபிஷேக் சர்மா 37 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 68 ரன் எடுத்தார். ஹர்சித் ராணாவும் (33 பந்தில் 35 ரன்) சிறப்பாக பேட்டிங் செய்தார். ஆஸ்திரேலிய தரப்பில் பவர்பிளேயில் மேஜிக் பவுலிங் செய்த ஜோஸ் ஹேசில்வுட் 4 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். பார்லெட், எல்லிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

பவர்பிளேயில் கதற விட்ட ஆஸ்திரேலியா

பின்பு எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அதிரடியில் வெளுத்துக் கட்டினார்கள். அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் ஹர்சித் ராணா பந்துகளை பவுண்டரியும், சிக்சருமாக விரட்டி சிதறித்தார். இதேபோல் பவர்பிளேயில் பும்ராவும் பந்துவீச்சும் சிறப்பாக இல்லை. ஆஸ்திரேலிய அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்தது.

Related Articles

Related image1
IND vs AUS: கான்பெராவில் விளையாடிய மழை! முதல் டி20 போட்டி பாதியில் ரத்து! ரசிகர்கள் ஏமாற்றம்!
Related image2
IND vs AUS 2nd T20: ஹேசில்வுட் புயலில் சிக்கிய இந்தியா! தனியாக போராடிய அபிஷேக்! ஆஸி.க்கு எளிய இலக்கு!
34
ஹெட், மார்ஷ் அதிரடி
Image Credit : Getty

ஹெட், மார்ஷ் அதிரடி

தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தொடக்க ஜோடியை பிரித்தார். 15 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 28 ரன் அடித்த டிராவிஸ் ஹெட் வருண் பந்தில் திலக் வர்மாவின் சூப்பர் கேட்ச்சில் அவுட் ஆனார். மறுமுனையில் கேப்டன் மிட்ச்செல் மார்ஷ் குல்தீப் யாதவ்வின் ஒரே ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசி அசத்தினார். 26 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரியுடன் 46 ரன்கள் அடித்து அதே ஓவரில் அவுட் ஆனார்.

ஆஸ்திரேலியா அபார வெற்றி

பின்பு டிம் டேவிட் (1), ஜோஸ் இங்கிலீஷ் (20) அடுத்தடுத்து குல்தீ, வருண் பந்தில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா வெற்றியை நெருங்கிய வேளையில் பும்ரா மிட்ச்செல் ஓவன் (14), மேத்யூ ஷார்ட் (0) 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆறுதல் அளித்தார். முடிவில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவரில் 6 விக்கெட் இழந்து 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

இதன் மூலம் இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. புயல் வேக பந்துவீசிய ஹேசில்வுட் ஆட்டநாயகன் விருது வென்றார்.

44
இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணம்?
Image Credit : X/BCCI

இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணம்?

இந்த போட்டியில் இந்தியாவின் பவுலிங் நன்றாக இருந்தபோதும் பேட்டிங் படு மோசமாக இருந்தது. சூர்யகுமார் உள்ளிட்ட முன்னனி பேட்ஸ்மேன்கள் சொதப்பியதே இந்தியாவின் தோல்விக்கு முதல் காரணமாகும். 

அத்துடன் கேப்டன் சூர்யகுமார் சஞ்சுசாம்சன் (5வதில் இருந்து 2வது), ஷிவம் துபே (ஹர்சித் ராணாவுக்கு பிறகு) ஆகியோரின் பேட்டிங் ஆர்டரை மாற்றி தவறு செய்ததும் தோல்விக்கு ஒரு காரணமாகும். இது மட்டுமின்றி 33 பந்தில் 35 ரன் எடுத்த ஹர்சித் ராணா நன்றாக விளையாடிய அபிஷேக் சர்மாவுக்கு அதிகம் ஸ்டிரைக் கொடுக்காததும் தோல்விக்கு ஒரு காரணமாகும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
"பாக். பேட்ஸ்மேன்களை பதம் பார்த்த பும்ரா-பாண்டியா! சூப்பர் 8-க்கு கெத்தாக நுழைந்தது இந்தியா!"
Recommended image2
அபிஷேக் சர்மாவின் பலவீனம்.. 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கும் எதிரணிகள்.. டக் அவுட்டில் மோசமான சாதனை!
Recommended image3
IND vs PAK: பிட்ச் எப்படி இருந்தால் எனக்கென்ன.. அதிரடி பேட்டிங் சீக்ரெட்டை சொன்ன இஷான் கிஷன்!
Related Stories
Recommended image1
IND vs AUS: கான்பெராவில் விளையாடிய மழை! முதல் டி20 போட்டி பாதியில் ரத்து! ரசிகர்கள் ஏமாற்றம்!
Recommended image2
IND vs AUS 2nd T20: ஹேசில்வுட் புயலில் சிக்கிய இந்தியா! தனியாக போராடிய அபிஷேக்! ஆஸி.க்கு எளிய இலக்கு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved