- Home
- Cinema
- தொலைக்காட்சி
- TRP ரேஸில் அதிரடி மாற்றம்... அதிக ரேட்டிங்கை வாரிசுருட்டிய டாப் 10 சீரியல்கள் என்னென்ன?
TRP ரேஸில் அதிரடி மாற்றம்... அதிக ரேட்டிங்கை வாரிசுருட்டிய டாப் 10 சீரியல்கள் என்னென்ன?
ரசிகர்கள் மனதை வென்று டிஆர்பி ரேஸில் டாப் 10 இடங்களை பிடித்த தமிழ் சீரியல்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். வழக்கம்போல் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான் இதில் இடம்பிடித்துள்ளன.

Top 10 Tamil Serial TRP Rating
தமிழ் சீரியல்கள் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் மிகப்பெரிய மாற்றங்களை சந்தித்துள்ளது. முன்னணியில் இருந்த சில தொடர்கள் பின்னடைவை சந்திக்க, கதைக்களத்தில் திருப்பங்களும், விறுவிறுப்பான எபிசோடுகளும் கொண்ட சீரியல்கள் டாப் இடங்களை கைப்பற்றியுள்ளன. குறிப்பாக உணர்ச்சி பூர்வமான காட்சிகளும், வலுவான நடிப்பு மற்றும் எதிர்பாராத திருப்பங்களையும் கொண்ட சீரியல்கள் இந்த வார டிஆர்பி பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. எந்த சீரியல்கள் ரசிகர்களின் மனதை வென்றுள்ளன, எவை பின்னடைவை சந்தித்துள்ளன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
10. சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் இந்த வார டிஆர்பி ரேஸில் 10ம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 7.55 புள்ளிகளை பெற்றிருந்த இந்த சீரியல் இந்த வாரம் அதைவிட குறைவாக 6.78 டிஆர்பி ரேட்டிங்கை மட்டுமே பெற்று 10வது இடத்தை தக்கவைத்து உள்ளது.
9. அன்னம்
சன் டிவியின் அன்னம் சீரியல் கடந்த வாரம் 8.51 புள்ளிகள் உடன் 6-ம் இடத்தில் இருந்தது. ஆனால் இந்த வாரம் பின்னடவை சந்தித்துள்ள இந்த சீரியல், 8.31 டிஆர்பியை பெற்று இந்த பட்டியலில் 9-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. அந்த சீரியலில் அபி நட்சத்திரா நாயகியாக நடிக்கிறார்.
8. சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக இருந்து வந்த சிறகடிக்க ஆசை கடந்த சில வாரங்களாக டிஆர்பியில் தடுமாறி வருகிறது. கடந்த வாரம் 8.41 புள்ளிகள் உடன் 7-வது இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 8.35 புள்ளிகளோடு 8-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
7. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்றுகொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல், இந்த வாரம் முன்னேறி இருக்கிறது. கடந்த வாரம் 7.91 புள்ளிகள் உடன் 9-வது இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் 8.40 புள்ளிகள் உடன் 7-ம் இடத்துக்கு தாவி இருக்கிறது.
6. மருமகள்
பிக் பாஸ் கேப்ரியல்லா ஹீரோயினாக நடித்து வரும் மருமகள் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் 8.99 புள்ளிகள் உடன் 5-ம் இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 8.61 புள்ளிகள் உடன் 6-ம் இடத்தில் உள்ளது.
5. அய்யனார் துணை
எதிர்நீச்சல் தொடர் மூலம் பேமஸ் ஆன மதுமிதா, விஜய் டிவியில் நடித்து வரும் அய்யனார் துணை சீரியல், இந்த வாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த வாடம் 8.28 புள்ளிகள் உடன் 8ம் இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த 8.65 புள்ளிகளோடு 5-ம் இடத்துக்கு தாவி இருக்கிறது.
4. எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் செம ஸ்பீடான கதைக்களத்தோடு நகர்ந்து வரும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியல் கடந்த வாரம் 9.41 புள்ளிகள் 3ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 8.72 புள்ளிகளை மட்டுமே பெற்று 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
3. கயல்
சைத்ரா ரெட்டி ஹீரோயினாக நடித்து வரும் கயல் சீரியல், கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த வாரம் 9.36 புள்ளிகள் உடன் 4-ம் இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் 9.11 ரேட்டிங் உடன் 3-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.
2. சிங்கப்பெண்ணே
சன் டிவியில் பிரைம் டைம் சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வரும் சிம்ங்கப்பெண்ணே சீரியல், 2ம் இடத்தில் உள்ளது. அமல்ஜித், மனிஷா மகேஷ் நடிப்பில் உருவான இந்த சீரியல் கடந்த வாரம் 9.67 ரேட்டிங்கும், இந்த வாரம் 9.39 புள்ளிகளும் பெற்றிருக்கிறது.
1. மூன்று முடிச்சு
சன் டிவியில் வழக்கம்போல் மூன்று முடிச்சு சீரியல் தான் இந்த வாரமும் முதலிடத்தை தக்கவைத்து இருக்கிறது. கடந்த வாரம் 10.62 புள்ளிகளை பெற்ற இந்த சீரியல், இந்த வாரம் சரிவை சந்தித்து வெறும் 10.14 டிஆர்பி ரேட்டிங்கை பெற்று முதலிடத்தில் உள்ளது.

