- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!
கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!
Saravanan reveals the truth about his father in law ; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் சரவணன் தனது அப்பாவிடம் மாமனார் பற்றிய முக்கியமான உண்மையை கூறியுள்ளார்.

Pandian Stores 2 Serial Today Episode
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்து என்பது பற்றி பார்க்கலாம். அதற்கு முன்னதாக நேற்றைய எபிசோடில் மாணிக்கம் தனது மகள் காலேஜ் வரை படித்திருக்கிறாள் என்று திரும்ப திரும்ப சொல்லவே கோபத்தின் உச்சத்திற்கு சென்ற சரவணன் அண்டாவை எடுத்து மாணிக்கம் தலையில் போடசென்றார். பிறகு கதிர், செந்தில் தடுக்கவே அண்டாவை கீழே போட்டார். இந்த சூழலில் தான் இன்றைய எபிசோடில் எங்களது குடும்பம் ரொம்பவே நல்ல குடும்பம். இதுவரையில் எந்த தப்பும் செய்ததில்லை. நாங்கள் பாவம் அப்படி இப்படி என்று மாணிக்கம் பேசினார்.
Saravanan Exposes Maamanar
இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன், உங்களது குடும்ப லட்சனம் என்ன என்று எனக்கு தானே தெரியும். நீங்கள் செய்த எல்லா பிராடு தனத்திற்கும் நான் உடந்தையாக இருந்திருக்கிறேன். அதனால் நான் செய்தது தான் தவறு என சரவணன் கடைசியில் காசு பணம் எடுத்ததை தனது அப்பாவிடம் கூறிவிட்டார். இதற்காக நாம் மாமாவைத்தான் சந்தேகப்பட்டோம். ஆனால், காசு மாமா எடுக்கவில்லை அப்பா. இந்த ஆளு தான் எடுத்தாரு என்றார்.
Vijay TV Serial Updates
இதைத் தொடர்ந்து மாணிக்கம் என்ன நடந்தது என்ற உண்மையை சொன்னார். அதாவது மயிலுக்கு ரொம்ப நாளாவே திருமணம் நடக்கவில்லை. அதனால், ஜோசியரிடம் சென்று ஜாதகம் பார்த்தோம். அவருக்கு தோஷம் இருக்கிறது என்று ஆரம்பித்தார்கள். ஆனால், அதற்குள்ளாக கோமதியும், குழலியும் என்ன தோஷம் என்ன தோஷம் என்று ஆரம்பித்தார்கள். அதற்குள்ளாக மாணிக்கம் கொஞ்சம் அமைதியாகவே இருந்தார்.
Pandian Stores 2 Today Episode
பிறகு பாக்கியம் என்ன சம்பந்தி என்று ஆரம்பிக்க கடைசி வரை அமைதியாக இருந்த பாண்டியன் பேச ஆரம்பித்தார். அப்போது யாரும் பேச வேண்டாம். இனி நான் பேசுகிறேன், நீங்கள் எல்லோரும் கேளுங்கள் என்று பேச ஆரம்பித்தார். அதில் இத்தனை வருடங்களாக நான் கடை வைத்து நடத்தி வருகிறேன். இதில் நான் யாரையும் ஏமாற்றியது இல்லை. பொருளும் தரமான பொருளாகவே கொடுத்திருக்கிறோம்.
Pandian Stores 2 Latest Twist
பொய் சொன்னதும் கிடையாது. அப்படியிருக்கும் போது 12 ஆம் வகுப்பு தான் படித்திருக்கிறார் என்று சொல்லியிருந்தாலும் நாங்கள் எதுவும் சொல்லியிருக்க மாட்டோம். அதே போன்று 2 வயது வித்தியாசத்தை நாங்கள் பெரிதாக நினைக்கவே இல்லை. ஆனால், அதை ஏன் மறைத்தீர்கள்? எங்களை ஏமாற்ற நினைத்தீர்களா? யாரையும் ஏமாற்றாமல் ஒரு வாழ்க்கை வாழும் போது ஏமாற்றுபவர்களை பார்த்தால் ஒரு பயம் வரும். நான் விசாரிக்காமல் திருமணம் செய்து வைத்ததற்கு என்ன காரணம் தெரியுமா? நான் மனுஷங்களை நம்பி வாழ்கிறவன்.
Saravanan Reveals Truth
என்னைப் போன்று மற்றவர்களும் வெளிப்படையாக இருப்பார்களா என்று யோசிப்பவன். ஊர் உலகத்தில் எல்லோரும் சொல்வார்கள், பாண்டியா ஊர் உலகத்தில் உன்னைப் போன்று எல்லோரும் இருப்பார்களா என்று கேப்பாங்க. அது நடக்கவே நடக்காது என்று சொல்வாங்க. உங்கள் மீது வைத்த நம்பிக்கையில் மண் அள்ளி போட்டீங்க.
Pandian Stores 2 Saravanan Father-in-law
இவ்வளவு பொய் சொல்லி உங்களது மகளை திருமணம் செய்து வைத்துவிட்டீர்கள், அதன் பிறகு உங்களது மகள் சந்தோஷமாக வாழ வேண்டும். கல்யாணம் என்பது ஒருநாள் கூத்தா? யோசிக்க மாட்டீங்களா என்று சகட்டுமேனிக்கு திட்டிதீர்த்துள்ளார். ஆனால், மயில் விஷயத்தில் என்ன முடிவு செய்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.