- Home
- Cinema
- தொலைக்காட்சி
- அதே 4 ஸ்டெப்... ரம்யா ஜோ இன்னும் மாறவே இல்ல; மீண்டும் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட வீடியோ வைரல்
அதே 4 ஸ்டெப்... ரம்யா ஜோ இன்னும் மாறவே இல்ல; மீண்டும் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட வீடியோ வைரல்
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ரம்யா ஜோ. அந்நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன கையோடு ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆட்டம் போட்டிருக்கிறார்.

Ramya Joo Aadal Paadal Dance
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் தான் ரம்யா ஜோ. இவர் ஊர் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆட்டம் போட்டு அதன் மூலம் சோசியல் மீடியாவில் பேமஸ் ஆனார். ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆடியவர் என்கிற தன்னுடைய இமேஜை மாற்றுவதற்காக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ரம்யா ஜோ. முதல் வாரம் சண்டைக்கோழியாக இருந்த ரம்யா ஜோ, அதன்பின் இந்த நிகழ்ச்சியில் அன்பு கேங் உடன் இணைந்து ஆள் அட்ரஸே தெரியாமல் போனார்.
பிக் பாஸ் ரம்யா ஜோ
அங்கு இருக்கும் அனைவரும் இவர் எப்படி இவ்வளவு நாள் தாங்கினார் என்பது புரியாத புதிராக இருந்தது. பல வாரங்கள் டேஞ்சர் ஜோனில் இருந்த ரம்யா, எலிமினேட் ஆன வாரத்திற்கு முன் வீட்டு தலை டாஸ்கில் வெற்றிபெற்று முதன்முறையாக வீட்டு தலை ஆனார். அந்த வாரம் அவரின் கேப்டன்ஸி சொதப்பலாக இருந்ததால், விஜய் சேதுபதியே ரம்யாவை வறுத்தெடுத்தார். அதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத ரம்யா, தான் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகிக் கொள்வதாக சொல்லி அதிர்ச்சி கொடுத்தார்.
எலிமினேட் ஆன ரம்யா ஜோ
அதன்பின்னர் மெயின் டோரை திறந்து வைத்து, நீங்க வெளிய வாங்க என விஜய் சேதுபதி கூறினார். அதன்பின்னர் சக போட்டியாளர்கள் கன்வின்ஸ் பண்ணியதை அடுத்து மீண்டும் தான் கேமை தொடர்வதாக கூறினார் ரம்யா. அடுத்த வாரமும் ரம்யாவின் ஆட்டத்தில் முன்னேற்றம் இல்லாததால் அவரை எலிமினேட் செய்து வெளியே அனுப்பினர். கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ மற்றும் வியானா எலிமினேட் ஆகினர். எலிமினேட் ஆன ரம்யா ஜோ பிக் பாஸ் நிகழ்ச்சியில் 69 நாட்கள் இருந்ததன் மூலம் 4.5 லட்சம் சம்பாதித்து இருக்கிறார்.
ரம்யா ஜோ டான்ஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் ஆன கையோடு, தன்னுடைய ஆடல் பாடல் வேலையை மீண்டும் தொடங்கி இருக்கிறார் ரம்யா ஜோ. புதுக்கோட்ட மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் என்கிற ஊரில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ரம்யா ஜோ கலந்துகொண்டார். அதில் அவர் தன்னுடைய குழுவினருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள் பிக் பாஸில் போட்ட அதே 4 ஸ்டெப் தான் போடுறாங்க, ரம்யா ஜோ இன்னும் திருந்தவே இல்லை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

