- Home
- Cinema
- தொலைக்காட்சி
- என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
Pandian Stores 2 Serial Today 657th Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 657ஆவது எபிசோடில் இவ்வளவு பொய் சொல்லி தனது மகனை ஏமாற்றி வந்த தங்கமயிலை கோமதி லெப்ட் ரைட்டு வாங்கிவிட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு
என்னுடைய மகன் சொக்கத்தங்கம். அவன் ஒரு அப்பாவி. நாங்கள் கிழித்த கோட்டை தாண்ட மாட்டான். அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது. அவனை ஏமாற்ற எப்படி உனக்கு மனசு வந்தது. ராஜீ, மீனாவை விட உன்னைத்தான் என்னுடைய புருஷன் தலையில் தூக்கி வச்சு கொண்டாடினார். என்னுடைய மருமகள், என்னுடைய மருமகள் என்று கொண்டாடிய மனுஷனை எப்படி ஏமாற்ற மனசு வந்தது. எங்கு உன்னுடைய உண்மை வெளியில் வந்துவிடும் என்று தெரிந்து அவனைப் பற்றி தப்பு தப்பாக பேசினேல.
கதறி அழுத தங்கமயில்
அவன் உன்னை கொடுமைப்படுத்தினான, அவனுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் இருக்கிறது என்று என்னென்னவோ பொய் சொன்ன. பித்தலாட்டம் வேலை பண்ணிருக்க, என்னை பார்த்தால் லூசு மெண்டல் மாதிரி தெரியுதா? எம் ஏ வரை படிச்சியாக்கும், இல்ல இல்ல எங்களை ஏமாற்ற படிச்சிட்டு வந்துருக்க. இந்த லச்சனத்தில் பேக்கை எடுத்துக் கொண்டு வேலைக்கு போறேன் என்ற பெயரில் அங்க போறதும் இங்க போறதும் என்று இருந்தாள்.
பித்தலாட்ட குடும்பம்
இதை மட்டும் தான் பொய் சொல்லி ஏமாத்திருக்கயா இல்ல இன்னும் என்னென்ன பொய் சொல்லிருக்க என்றெல்லாம் கேள்வி மேல கேள்வி கேட்டார். படித்திருக்க என்று தான் உனக்கு வேலை வாங்கி கொடுத்தார். ஆனால், உன்னுடைய படிப்பு விஷயம் தெரிந்திருந்தால் அவ்வளவு தான். கடைசி வரை உண்மை தெரியக் கூடாது என்று இவ்வளவு பொய் சொல்லி எல்லோரையும் ஏமாற்றியிருக்கிறாள்.
தங்கமயிலுக்கு சாபம் விட்ட கோமதி
வயிறு எரிந்து சொல்கிறேன் நீ நல்லாவே இருக்கமாட்ட என்று சாபம் விட்டார். அந்தளவிற்கு தனது மகனை கஷ்டப்படுத்தியிருக்கிறார். தனது மகனைப் நம்பாமல் மருமகளை நம்பி இப்படி ஏமாந்து உட்கார்ந்திருக்கிறேன் என்று சொல்லி பாண்டியன் கண்ணீர் விட்டு அழுதார். எப்படியோ தங்கமயிலைப் பற்றிய எல்லா உண்மைகளும் தெரிந்துவிட்டது. இனி வரும் எபிசோடுகளில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். எத்தனையோ நாட்கள் தூக்கத்தை தொலைத்து தூங்காமல் கண் விழித்து கதறிக் கொண்டிருந்த சரவணன் இன்று எல்லா உண்மைகளையும் சொன்ன ஒரு சந்தோசத்தில் தனது அப்பாவின் மடியில் தூங்கிக் கொண்டிருந்தார்.