- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கம்பீரமாக எண்ட்ரி கொடுத்த பாஸ் கார்த்திக்- சூடுபிடிக்க தொடங்கிய கார்த்திகை தீபம்; கொண்டாடும் ஃபேன்ஸ்!
கம்பீரமாக எண்ட்ரி கொடுத்த பாஸ் கார்த்திக்- சூடுபிடிக்க தொடங்கிய கார்த்திகை தீபம்; கொண்டாடும் ஃபேன்ஸ்!
Karthik Raj New Avatar in Karthigai Deepam Serial : கார்த்திகை தீபம் சீரியலில் நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக் பாஸ் ரோலில் எண்ட்ரி கொடுத்த புரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.

Karthigai Deepam serial upcoming spoilers and twists
கார்த்திகை தீபம் சீரியல் இப்போது தான் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. இத்தனை நாட்களாக டிரைவராக வேலை சஷ்டியில் கார்த்திக்கை பார்த்த சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலாவிற்கு இப்போது ஆடி காரில் கம்பீரமாக பேண்ட் சட்டையில் வந்து இறங்கியதை பார்த்து ஒரே ஷாக். என்ன செய்வது என்றே தெரியாமல் அப்படியே ஆடிப்போய் நிற்கிறார்கள். அப்படி என்ன நடந்தது? என்பது பற்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Will Karthik save Revathi from Chamundeshwari?
கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய டிசம்பர் 19க்கான புரோமோ வீடியோவை ஜீ தமிழ் வெளியிட்டது. அதில், சாமுண்டீஸ்வரிக்கு சொந்தமான செங்கல் சூளை ஏலத்திற்கு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சந்திரகலா. ஏனென்றால் கார்த்திக்கை வீட்டை விட்டு துரத்தப்பட்ட பிறகு செங்கல் சூளையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கார்த்திக்கை திரும்ப கொண்டு வர வேண்டும் என்று அவரது வீட்டில் வந்து கோரிக்கை வைத்தனர். அவர் இல்லையென்றால் நாங்கள் வேலை செய்யமாட்டோம் என்று கூறினர்.
Karthik Raj new avatar in Karthigai Deepam serial
இதைத் தொடர்ந்து சந்திரகலா தான், அக்கா செங்கல் சூளையை இழுத்து மூடிவிடு அல்லது ஏலத்தில் விற்றுவிடலாம் என்று ஐடியாக கொடுத்தார். அதன்படியே இனிமேல் நீங்கள் யாரும் வேலைக்கு வர வேண்டாம். நான் சூளையை ஏலத்தில் விடப்போகிறேன் என்று தெரிவித்தார். இதை கேட்டு தொழிலாளர்கள் மட்டுமின்றி வீட்டிலுள்ளவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு எத்தனையோ முறை அறிவுரை கூறினாலும் அதையெல்லாம் கேட்கும் மனநிலையில் சாமுண்டீஸ்வரி இல்லை.
Karthigai Deepam December 2025 Updates
தங்கை சந்திரகலாவின் வாக்கு தான் வேத வாக்காக கொண்டு அவர் சொல்வதையெல்லாம் கேட்டு நடக்கிறார். அப்படித்தான் இப்போது செங்கல் சூளையையும் ஏலத்தில் விடுகிறார். சந்திரகலாவோ தனது அத்தை காளியம்மாள் என்ன சொல்கிறாரோ அதன் படி செய்கிறார். அவர், இந்த ஏலத்தில் நமது ஆட்கள் கலந்து கொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் ஏலம் எடுக்க கூடாது என்று கூறியதைக் கேட்டு சந்திரகலாவின் ஆட்கள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.
Karthik Raj Boss Look Entry
கார்த்திக் ஏற்கனவே சென்னையில் பிஸினஸ் செய்தவர். பல நிறுவனங்களுக்கு ஓனர். அப்படியிருக்கும் போது இது வெறும் செங்கல் சூளை தான். ஆதலால் அதை எடுக்காமல் விட்டுவிடுவாரா? சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலாவிற்கு தெரியாமலே அவரும் மேனேஜரை அனுப்பி வைத்தார். இந்த நிலையில் தான் இன்றைய எபிசோடிற்கான புரோமோ வீடியோவில் செங்கல் சூளை ஏலத்தின் ஆரம்ப விலை ரூ.50 லட்சத்திலிருந்து ஆரம்பமாகிறது.
Karthik Raj Boss Look Entry
அதன் பிறகு ரூ.55 லட்சம், ரூ.65 லட்சம், ரூ.85 லட்சம், ரூ.90 லட்சம், ரூ.95 லட்சம் என்று கேட்டுக்கொண்டே வர கடைசியாக ரூ.1 கோடிக்கு ஒருவர் ஏலம் எடுத்தார். அதைக்கேட்டு சந்திரகலா அதிர்ச்சி அடைந்தார். மேலும், அந்த தொகையே கடைசியாக உறுதி செய்யப்பட்டது. நான் மேனேஜர் தான். எங்களுடைய பாஸ் இப்போது வருவார் என்று அவர் சொல்லவே ஆடி காரில் காரில் பேண்ட் சர்ட்டில் சும்மா கெத்தா, கம்பீரமாக வந்து இறங்குகிறார்.
Karthigai Deepam Serial Today Episode
அப்போது அஜித்தின் வீரம் ரத கஜ துராதி பதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்திடும் வீரம் என்ற பாடல் ஒலிக்க செய்யப்படுகிறது. அதோடு புரோமோ வீடியோ முடிகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த மாதிரி தான் நாங்கள் கார்த்திக்கை பார்க்க ஆசைப்பட்டோம். நாங்க எதிர்பார்த்தது இந்த மாஸ் கார்த்தியை தான், வந்துட்டாரா எங்க ஹீரோ, இதை இதை இதை தான் நாங்க எதிர்பார்த்தோம், சாமுண்டீஸ்வரி சந்திரகலா ரியக்சன் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.