- Home
- Cinema
- தொலைக்காட்சி
- மருமகன் மீது கொலை முயற்சி புகார்: 'கார்த்திகை தீபம் சீரியல் கார்த்திக் அதிரடி கைது!
மருமகன் மீது கொலை முயற்சி புகார்: 'கார்த்திகை தீபம் சீரியல் கார்த்திக் அதிரடி கைது!
Karthigai Deepam Serial Karthik Shocking Arrest : கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் கார்த்திக் அதிரடியாக கைது செய்யப்பட்டு போலீஸ் லாக்கப்பில் அடைக்கப்பட்டுள்ளார்.

கார்த்திகை தீபம்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'கார்த்திகை தீபம்' சீரியல் தற்போது உச்சக்கட்ட க்ரைம் த்ரில்லராக மாறியுள்ளது. சாமுண்டீஸ்வரியின் கண்மூடித்தனமான கோபத்தால் கார்த்திக், ரேவதி இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், கார்த்திக் இப்போது கொலை முயற்சிப் புகாரில் சிக்கியுள்ளார்.
தங்கம் முதல் சாக்லேட் வரை: கார்த்திக்கின் தியாகம்
சாமுண்டீஸ்வரி யார் நல்லவர், யார் கெட்டவர் என்று தெரியாமல் கண்மூடித்தனமாகச் செயல்படுவதால், காளியம்மாள், சிவனாண்டி, முத்துவேல் ஆகியோரின் சதிவலையில் சிக்கினார்.
கார்த்திக்கின் உதவி: அவர்கள் சாமுண்டீஸ்வரியைக் கொல்ல அடியாட்களை அனுப்பியபோது, கார்த்திக்தான் வந்து அவரையும் குடும்பத்தையும் காப்பாற்றினார்.
சந்திரகலாவின் சதி: பஞ்சாயத்துத் தலைவரான சாமுண்டீஸ்வரி லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு போன் செய்த சந்திரகலாவை கார்த்திக் இன்னமும் விட்டு வைத்திருப்பதுதான் ஆச்சரியம்.
காப்பாற்றிய கார்த்திக்:
லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சாமுண்டீஸ்வரியை கைது செய்ய முயன்றபோது, கார்த்திக் குறுக்கே வந்து அது தங்கம் அல்ல, சாக்லேட் என்று கூறி அவரை மீட்டார். மேலும், சதி செய்தவர்களைக் கண்டுபிடித்து மாட்டிவிட்டார்.
லாக்கப் ஐடியா: சந்திரகலாவின் நாடகம்!
கார்த்திக்கைப் பழிவாங்க வேண்டும் என்ற வெறியில் இருந்த சந்திரகலா, லாக்கப்பில் இருந்த காளியம்மாளின் ஐடியாவின் பெயரில் ஒரு பயங்கரமான நாடகத்தை அரங்கேற்றினார்:
1. பொய் புகார்: முதலில் சாமுண்டீஸ்வரிக்கு போன் செய்து, "கார்த்திக் தன்னைக் கொல்லப் பார்க்கிறார்" என்று அழுது புரண்டு நாடகமாடினார்.
2. பலியான கார்த்திக்: பிறகு கார்த்திக்கை அந்த இடத்திற்கு வரவழைத்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லேசாகக் குத்திக்கொண்டு, கத்தியைக் கீழே போட்டார்.
3. வைரல் ப்ரோமோ: வலியால் துடித்த சந்திரகலாவை சாமுண்டீஸ்வரியே மருத்துவமனைக்குத் அழைத்துச் செல்லும் ப்ரோமோ வீடியோ வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
கார்த்திகை தீபம் 1059ஆவது எபிசோடுக்கான புரோமோ
இந்த நிலையில் தான் இன்று வெளியான 1059ஆவது எபிசோடுக்கான புரோமோவில் மருமகனான கார்த்திக் மீது கொலை முயற்சி புகார் கொடுத்துள்ளார் சிக்கியுள்ளார். மேலும், இவ்வளவு தூரம் சொல்கிறேன் சார் இவனை கைது செய்யுங்கள் என்று சொல்லவே கார்த்திக்கை கைது செய்த போலிசார் லாக்கப்பில் அடைத்தனர்.
மேலும், இதுவரைக்கும் நீ பார்த்த சாமுண்டீஸ்வரி வேறு, இனிமேல் நீ பார்க்க போகும் சாமுண்டீஸ்வரி வேறு. என்னை நம்ப வைத்து நம்பிக்கைத்துரோகம் செய்ததற்காக நீ தினம் தினம் சித்திரவதையை அனுபவிக்க போற என்று எச்சரித்தார். அதோடு இன்றைய புரோமோ வீடியோ முடிந்தது. இனி என்ன நடக்க போகிறது என்பது குறித்து இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.