- Home
- Cinema
- தொலைக்காட்சி
- டிஸ்சார்ஜ் ஆகும் ஈஸ்வரி... களத்தில் இறங்கி சம்பவம் செய்ய தயாராகும் அறிவுக்கரசி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
டிஸ்சார்ஜ் ஆகும் ஈஸ்வரி... களத்தில் இறங்கி சம்பவம் செய்ய தயாராகும் அறிவுக்கரசி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் மருத்துவமனை சென்று ஈஸ்வரியை பார்க்க போன ரேணுகா, அவரது டிஸ்சார்ஜ் பற்றி நந்தினியிடம் கூறி இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் தலைமறைவாக இருந்தாலும் அவருக்கு வீட்டில் நடக்கும் விஷயங்கள் பற்றிய அப்டேட் உடனுக்குடன் அறிவுக்கரசி வாயிலாக செல்கிறது. ஜனனி தொடங்க இருக்கும் தமிழ் சோறு பிசினஸை தொடங்க விடாமல் தடுக்க பல்வேறு வேலை பார்த்து வந்த குணசேகரன், தன் தரப்பு வக்கீலை அனுப்பி முட்டுக்கட்டை போட பார்த்தார். ஆனால் சரியான நேரத்தில் எண்ட்ரி கொடுத்த அப்பத்தா, அந்த சொத்துக்களில் இந்த வீட்டு பெண்களுக்கும் பங்கு இருப்பதாக கூறி, குணசேகரன் பிளானில் மண்ணை அள்ளிப்போட்டார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
தர்ஷினி கொடுக்கும் ஐடியா
தமிழ் சோறு பிசினஸை தொடங்கும் முன்பே அதனை புரமோட் செய்யும் வேலையில் தர்ஷினி பிசியாக இருக்கிறார். ஆனால் ஜனனி அதெல்லாம் பிசினஸ் தொடங்கி மக்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்த பின்பு பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார். அதற்கு தர்ஷினி, ஃபுட் ரிவியூவர்களை வர வைத்து நம்ம கடையில் சாப்பிட்டு நேர்மையான ரிவ்யூ கொடுக்க சொல்வோம் என சொல்ல, அதற்கு நந்தினி, அவங்கெல்லாம் வேண்டாம். போன வாரம் கூட ஒரு ஃபுட் ரிவ்யூவர் ஆஹா ஓஹோனு சொன்ன பிரியாணியை வாங்கி சாப்பிட்டேன் வாயில் வைக்க முடியல. இப்போதைக்கு அதெல்லாம் வேண்டாம் என கூறுகிறார் நந்தினி.
ஈஸ்வரி பற்றி வந்த குட் நியூஸ்
பின்னர் ஆஸ்பத்திரிக்கு ஈஸ்வரியை பார்க்க சென்றிருந்த ரேணுகா, நந்தினிக்கு போன் போட்டு பேசுகிறார். அப்போது அங்கு டாக்டரிடம் விசாரித்தபோது, அவர் ஈஸ்வரியை வீட்டுக்கு கூட்டிட்டு செல்லலாம் என சொன்னதாகவும், அவரும் நம்முடன் தமிழ் சோறு திறப்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். இதைக்கேட்டு அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஈஸ்வரியாக நடித்த கனிகா இந்த சீரியலை விட்டு விலகிவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் மீண்டும் வீட்டுக்கு வர உள்ளதாக ரேணுகா கூறுவதால், அது நடக்குமா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
அறிவுக்கரசியின் அடுத்த அதிரடி
மறுபுறம் இந்த தமிழ்சோறு பிசினஸ் தொடங்கவிடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு சுற்றும் அறிவுக்கரசி, கதிரிடம் போன் போட்டு பேசுகிறார். முடிச்சுவிட சொல்றீங்களா... யாரை முடிச்சு விடணும்னு சொல்லுங்க முடிச்சு விட்டிடுறேன். ஆம்பளையா நீங்கதான் எல்லாத்தையும் பண்ணனும்னு நினைச்சீங்கனா நீங்களாச்சும் செய்யுங்க என சொல்கிறார். இதனால் அவர்கள் செய்யப்போகும் சூழ்ச்சி என்ன? யாரை போட்டுத்தள்ள பிளான் போட்டுகிறார்கள். அடுத்தடுத்து அரங்கேறப்போகும் ட்விஸ்ட் என்ன? என்பதை இனி வரும் எபிசோடுகளில் தெரிந்து கொள்ளலாம்.

