இனி இந்த போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது! உங்க மொபைல் லிஸ்டில் இருக்கா.?
போன் வாங்கும் முன், அதன் OS (Operating System) version-ஐ சரிபார்க்குவது மிக முக்கியம். பாதுகாப்பு காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

வாட்ஸ்அப் தடை
பலர் புதிய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக பழைய அல்லது யூஸ்டு மொபைல் போன்களை வாங்க விரும்புபவர்கள். ஆனால், வாங்கும் முன் சில முக்கிய விஷயங்களை கவனிக்காமல் விட்டால் பிறகு அதிர்ச்சி அடைய நேரிடலாம். அதில் முக்கியமானது. அந்த போனில் வாட்ஸ்அப் இயங்குகிறதா இல்லையா என்பது. இன்று எந்த போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்பதையும், எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதையும் பார்ப்போம்.
வாட்ஸ்அப்
WhatsApp-ன் அதிகாரப்பூர்வ FAQ பக்கத்தின் படி, இப்போ வாட்ஸ்அப் Android 5.0 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகள், iOS 15.1 மற்றும் அதற்கு மேல் iPhone-களிலுமே இயங்கும். அதாவது, நீங்கள் வாங்கப்போகும் போன் Android 5.0-க்குக் கீழே அல்லது iOS 15.1-க்குக் கீழே இருந்தால், வாட்ஸ்அப் வேலை செய்யாது. எனவே யூஸ்டு போன் வாங்கும் முன், அது எந்த பதிப்பில் இயங்குகிறது என்பதை சரிபார்ப்பது மிகவும் அவசியம். இல்லை என்றால் வாங்கிய பிறகு வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாமல் போகலாம்.
OS பதிப்பு எப்படிச் சரிபார்ப்பது?
ஆண்ட்ராய்டு போனில் “அமைப்புகள்” “தொலைபேசியைப் பற்றி” என்ற விருப்பத்தைத் திறந்தால், அந்த போன் எந்த ஆண்ட்ராய்டு பதிப்பில் இயங்குகிறது என்பதைக் காணலாம். மேலும் iPhone-ல் “Settings → General → About” பகுதியில் சென்று பதிப்பு விவரங்களை பார்க்கலாம். இதைச் சரிபார்த்த பிறகு தான் பழைய போன் வாங்குவது புத்திசாலித்தனமான முடிவு.
ஆண்ட்ராய்டு அப்டேட்
பலர் கேட்பார்கள் “ஏன் வாட்ஸ்அப் பழைய போன்களில் வேலை செய்யாது?” என்று. அதற்கு முக்கிய காரணம், பழைய இயங்குதளங்கள் (OS) பாதுகாப்பு அப்டேட்களைப் பெறுவதில்லை. அதனால் WhatsApp பழைய பதிப்பு போன்களில் சேவையை நிறுத்துகிறது. இதன் மூலம் புதிய பொன்களுக்கான செயல்திறன் மற்றும் பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது. எனவே, அடுத்த முறை யூஸ்டு போன் வாங்கும் முன், அது வாட்ஸ்அப் ஆதரவு உள்ளதா என்பதை சரிபார்க்க மறக்காதீர்கள்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

