- Home
- டெக்னாலஜி
- அனைத்து வீடுகளுக்கும் மாதம் ரூ.200க்கு ஹைஸ்பீடு இண்டர்நெட் :தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு
அனைத்து வீடுகளுக்கும் மாதம் ரூ.200க்கு ஹைஸ்பீடு இண்டர்நெட் :தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு
தமிழக அரசு மாதம் ரூ.200க்கு 100 Mbps வேகத்தில் இணைய சேவை வழங்க திட்டமிட்டுள்ளது. திட்டம் மற்றும் செயல்பாட்டு விவரங்கள்.

தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அதிவேக இணைய சேவை வழங்கும் திட்டத்தை அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது. இது தொடர்பான முக்கிய அறிவிப்பை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தில் கேபிள் டிவி சேவை வழங்குவது போல, வீடுகள் தோறும் 100 Mbps வேகத்தில் மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய சேவை வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், இ-சேவை மையங்களில் பெறக்கூடிய சேவைகள் வாட்ஸ்அப் செயலி மூலம் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக, 2,000 அரசு அலுவலகங்களுக்கு இணைய வசதி கொடுக்கப்பட்டுள்ளது என்றும், 4,800 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து இணைய வசதி வேண்டும் என்று விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த கிராமங்களுக்கு தேவையான வசதிகள் உள்ளதா என்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அரசின் இந்த அறிவிப்பு தமிழக மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதிவேக இணைய சேவையைப் பெற ஒரு வாய்ப்பை வழங்கும்.
வெறும் ரூ.26க்கு 28 நாள் வேலிடிட்டி! பயனர்களை வியப்பில் ஆழ்த்தும் Jio
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.