உங்கள் மொபைல் போன் பாதுகாப்பானதா? இந்த செட்டிங்ஸ் மாத்திடுங்க.. இல்லேன்னா காலி..
உங்கள் போனில் ஹேக்கர்கள் நுழைவதைத் தடுக்க, சில எளிய செட்டிங்ஸ் மாற்றங்கள் போதுமானது. இதனால் உங்கள் வங்கி மற்றும் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

சின்ன மேட்டர் பெரிய பாதுகாப்பு
தற்போதைய நிலையில், ஹேக்கர்ஸ்கரிளிடம் இருந்து போனை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியமாகிறது. இல்லையேல் வங்கி தகவல்கள் மட்டுமின்றி நம்முடைய தனிப்பட்ட தகவல்களும் திருடப்படும் சூழல் ஏற்படுகிறது. இப்போ காலத்துல, ஹேக்கர்ஸ் போனுக்குள் நுழைஞ்சா வங்கி தகவல்கள், புகைப்படங்கள், சாட்கள் எல்லாத்துக்கும் ஆபத்தாகும்! ஆனா சில சாதாரண செட்டிங்ஸ் மாற்றினாலே இந்த ஆபத்தை பாதியிலேயே நிறுத்தலாம்.
Google Usage & Diagnostics – இதை ஆப் பண்ணுங்க
உங்கள் போனில் Settings > Google > Google Services > All Services க்கு போங்க. அங்க இருக்கும் Usage & Diagnostics என்பதைக் Disable பண்ணுங்க. இதை ஆப் செய்தவுடனே, உங்கள் போனில் நடக்கும் செயல்களை கூகுள் கிளவுட் அதிகமாக சேகரிக்க முடியாது. இதனால் ஹேக்கிங் ரிஸ்க் குறையும்.
Digital Wellbeing Settings-லும் ஒரு சின்ன மாற்றம்
Settings > Digital Wellbeing & Parental Controls > Settings > Usage Data Access அங்க இருக்கும் Allow Permission-ஐ Disable பண்ணுங்க. இதன் மூலம், சில ஆப்கள் உங்களது போன் பயன்பாட்டு தகவல்களை பின்னணி (background) ல் சேகரிப்பது தடுக்கப்படும். பாதுகாப்பு அதிகரிக்கும்.
Customization Services-ஐ ஆப் பண்ணுங்கள்
அதே Digital Wellbeing பகுதியிலிருந்தே Customization Services க்கு போய், Digital Wellbeing-ஐ Turn Off பண்ணுங்க. இதை ஆப் பண்ணினா உங்கள் போன் எந்த தகவலையும் தேவையில்லாமல் பகிராது. ஹேக் ஆகும் வாய்ப்பே குறைந்து போம்.
உங்கள் மொபைல் போன் பாதுகாப்பானதா? இந்த செட்டிங்ஸ் மாத்திடுங்க.. இல்லேன்னா காலி..
Three dangerous phone settings to turn off now!
Save your phone from Hack. pic.twitter.com/3YIWcMOZDj— Unmai Kasakkum (@Unmai_Kasakkum) December 10, 2025
இப்போ உங்கள் போனுக்கு 100% பாதுகாப்பு
சிம்பிளா சொல்லணும்னா… இந்த மூணு செட்டிங்ஸ் ஆப் பண்ணினீங்கன்னா:
✔ உங்கள் போன் தகவல்களை யாரும் திருட முடியாது
✔ வங்கி டேட்டா பாதுகாப்பாக இருக்கும்
✔ ஹேக்கர்ஸ்க்கு நுழைய வழியே கிடையாது
அவ்ளோதான் புரோ! இப்போ உங்கள் போன் 100% பாதுகாப்பு மோடுல் இருக்குது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

