MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • மிட்-ரேஞ்ச் போன் + முதல் 5ஜி டேப்லெட்.. எல்லாமே பட்ஜெட்டில்.. OnePlus 15R & Pad Go 2வை வாங்க ரெடியா

மிட்-ரேஞ்ச் போன் + முதல் 5ஜி டேப்லெட்.. எல்லாமே பட்ஜெட்டில்.. OnePlus 15R & Pad Go 2வை வாங்க ரெடியா

ஒன்பிளஸ் நிறுவனம், புதிய ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போன் மற்றும் ஒன்பிளஸ் Pad Go 2 டேப்லெட்டை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை பிரீமியம் அனுபவத்தை மிட்-ரேஞ்ச் விலையில் வழங்குகிறது. இதன் விலை, சிறப்பு அம்சங்களை பார்க்கலாம். 

2 Min read
Author : Raghupati R
Published : Dec 18 2025, 09:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்தியாவில் OnePlus 15R, Pad Go 2 அறிமுகம்
Image Credit : Google

இந்தியாவில் OnePlus 15R, Pad Go 2 அறிமுகம்

ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போன் மற்றும் ஒன்பிளஸ் Pad Go 2 டேப்லெட் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. அதிக விலை கொண்ட ஃபிளாக்ஷிப் மாடல்கள் வேண்டாம், அதே நேரத்தில் பிரீமியம் அனுபவம் வேண்டும் என்று நினைக்கும் பயனர்களை குறிவைத்து இந்த இரண்டு சாதனங்களும் வெளியிடப்பட்டுள்ளன. மிட்-ரேஞ்ச் பிரிவில் வலுவான போட்டியை உருவாக்கும் வகையில் இந்த லாஞ்ச் அமைந்துள்ளது என்றே கூறலாம்.

25
ஒன்பிளஸ் 15R
Image Credit : Google

ஒன்பிளஸ் 15R

விலை விவரங்களைப் பார்க்கும்போது, ​​ஒன்பிளஸ் 15R இந்தியாவில் ரூ.47,999 முதல் விற்பனைக்கு வருகிறது. 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை வேரியண்ட் இந்த விலையில் கிடைக்கிறது. 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட உயர்ந்த வேரியண்ட் ரூ.52,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 22 முதல் விற்பனைக்கு வரும். அதேபோல், ஒன்பிளஸ் Pad Go 2 டேப்லெட் ரூ.26,999 விலையில் அறிமுகமாகியுள்ளது.

Related Articles

Related image1
165 நாட்கள் வேலிடிட்டி.. ரேட் ரொம்ப கம்மி.. ஜியோ, ஏர்டெல்லை கதறவிடும் பிஎஸ்என்எல்
Related image2
New Year Offer: ஜியோ வழி தனி வழி.! அதிரடி ஆஃபர் வழங்கிய அம்பானி.! ரூ.35,000 மதிப்புள்ள பரிசு காத்திருக்கு.!
35
ஒன்பிளஸ் 15R அம்சங்கள்
Image Credit : OnePlus/FB

ஒன்பிளஸ் 15R அம்சங்கள்

256GB மாடல் ரூ.29,999 ஆகவும், 5G ஆதரவு கொண்ட மாடல் ரூ.32,999 ஆகவும் கிடைக்கிறது. டேப்லெட் டிசம்பர் 18 முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் AMOLED 1.5K டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 165Hz ரிஃப்ரெஷ் ரேட் ஆதரவு இந்த திரை, ஸ்மூத் ஸ்க்ரோலிங் மற்றும் கேமிங் அனுபவத்தை தரும். மேலும் IP66, IP68, IP69, IP69K போன்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங்க்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

45
ஒன்பிளஸ் 15R கேமரா
Image Credit : Google

ஒன்பிளஸ் 15R கேமரா

ஒன்பிளஸ் 15R-க்கு புதிய Snapdragon 8 Gen 5 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது OxygenOS 16 (Android 16 அடிப்படையில்) உடன் வருகிறது. 4 ஆண்டுகள் OS அப்டேட் மற்றும் 5 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என ஒன்பிளஸ் உறுதி அளித்துள்ளது. 50MP பிரதான கேமரா, 8MP அல்ட்ராவைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன. 7,400mAh பெரிய பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் முக்கிய அம்சம்.

55
ஒன்பிளஸ் Pad Go 2 டேப்லெட்
Image Credit : Google

ஒன்பிளஸ் Pad Go 2 டேப்லெட்

ஒன்பிளஸ் Pad Go 2 டேப்லெட்டில் 12.1 இன்ச் பெரிய டிஸ்ப்ளே, Dolby Vision மற்றும் 900 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்கப்பட்டுள்ளது. MediaTek Dimensity 7300 Ultra சிப்செட் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 10,050mAh பேட்டரி, 33W சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் ஸ்டைலோ ஆதரவு ஆகியவுடன், ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் 5G டேப்லெட்டாக Pad Go 2 அறிமுகமாகியுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நகர்பேசி
நுட்பக் கருவி
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.10,000 பட்ஜெட்டில் கெத்து காட்டும் 3 புது போன்கள்! 7000mAh பேட்டரி, 5G வேகம் - எதை வாங்குவது பெஸ்ட்?
Recommended image2
எடிட்டிங் தெரியாதா? கவலைய விடுங்க.. AI இருக்கு! மொபைலில் வீடியோ எடிட் செய்ய இதுதான் பெஸ்ட் ஆப்.
Recommended image3
ஹலோ சொன்னா சத்தம் வரலையா? அலட்சியமா இருக்காதீங்க.. பணத்தை ஆட்டைய போட புது ஸ்கெட்ச்!
Related Stories
Recommended image1
165 நாட்கள் வேலிடிட்டி.. ரேட் ரொம்ப கம்மி.. ஜியோ, ஏர்டெல்லை கதறவிடும் பிஎஸ்என்எல்
Recommended image2
New Year Offer: ஜியோ வழி தனி வழி.! அதிரடி ஆஃபர் வழங்கிய அம்பானி.! ரூ.35,000 மதிப்புள்ள பரிசு காத்திருக்கு.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved