ஜியோ வாடிக்கையாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் இலவசம்.. பெறுவது எப்படி?
ரிலையன்ஸ் ஜியோவின் சில பிரத்யேக பிரீபெய்ட் பிளான்களில் இலவச நெட்பிளிக்ஸ் சந்தா கிடைக்கும். இந்த பிளான்களில் நெட்பிளிக்ஸ், ஜியோ டிவி, ஜியோ கிளவுட் சேவைகளும் அடங்கும்.

ஜியோ பயனர்களுக்கு இலவச நெட்பிளிக்ஸ்
உங்களுக்கு பிடித்த நெட்பிளிக்ஸ் சீரியல், படங்களை தனியாக சந்தா கட்டாமல் பார்க்க விரும்புகிறீர்களா? ரிலையன்ஸ் ஜியோ அதற்கான சிறப்பு வாய்ப்பை கொண்டு வந்துள்ளது. தற்போது ஜியோவின் சில பிரத்யேக பிரீபெய்ட் பிளான்களில் இலவச நெட்பிளிக்ஸ் சந்தா கிடைக்கும். தனி பில் இல்லை, சிக்கல் இல்லை. எனவே நீங்கள் ரீசார்ஜ் செய்து உடனே ஸ்ட்ரீமிங் தொடங்கலாம்.
மொபைல் + நெட்பிளிக்ஸ் ஒரே பிளானில்
பொதுவாக நெட்பிளிக்ஸ் மாதாந்திர சந்தா சில நூறு ரூபாயிலிருந்து தொடங்குகிறது. ஆனால் ஜியோவின் இந்த சிறப்பு பிளான்களில், மொபைல் ரீசார்ஜ் மற்றும் நெட்பிளிக்ஸ் இரண்டையும் ஒரே தொகையில் பெறலாம். இதோடு ஜியோ டிவி, ஜியோ கிளவுட் சேவைகளும் கிடைக்கும். அதாவது பொழுதுபோக்கு, டேட்டா சேமிப்பு ஒரே ரீசார்ஜில் முடிகிறது.
ஜியோ ரீசார்ஜ்
ரூ.1,299 பிளான் ஆனது 84 நாட்கள் செல்லுபடியாகும். இதன் மூலம் தினமும் 2ஜிபி டேட்டா (மொத்தம் 168ஜிபி), அன்லிமிட்டெட் கால், தினமும் 100 எஸ்எம்எஸ். கூடுதலாக இலவச நெட்பிளிக்ஸ், ஜியோ டிவி, ஜியோ கிளவுட் கிடைக்கும். தினமும் ஸ்ட்ரீமிங் செய்யும் ஆனால் அதிக டேட்டா தேவைப்படாதவர்களுக்கு சரியான தேர்வு ஆகும்.
ஜியோ கிளவுட் இலவசம்
அதேபோல ரூ.1,799 பிளான் ஆனது 84 நாட்கள் செல்லுபடியாகும். தினமும் 3ஜிபி டேட்டா (மொத்தம் 252ஜிபி), அன்லிமிட்டெட் கால், தினமும் 100 எஸ்எம்எஸ். கூடுதலாக நெட்பிளிக்ஸ் பேசிக் பிளான், ஜியோ டிவி, ஜியோ கிளவுட் போன்ற வசதிகள் கிடைக்கும். அதிக வீடியோ ஸ்ட்ரீமிங், ஆன்லைன் கேமிங், வீடியோ கால் அல்லது பெரிய கோப்புகள் டவுன்லோடு செய்யும் பயனர்களுக்கு சிறந்தது.
ஜியோ நெட்பிளிக்ஸ் சந்தா
MyJio ஆப், ஜியோ வலைத்தளம் அல்லது ஏதேனும் பேமெண்ட் ஆப் மூலம் ரூ.1,299 அல்லது ரூ.1,799 பிளானில் ரீசார்ஜ் செய்யுங்கள். ரீசார்ஜ் ஆனது, உங்கள் நெட்பிளிக்ஸ் கணக்கை லிங்க் செய்யுங்கள் (புதிய கணக்கு உருவாக்கலாம்) மற்றும் உடனே பார்க்க தொடங்குங்கள். ஜியோவின் சில பிளான்களில் ஜியோ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் போன்ற OTT சலுகைகளும் உள்ளன.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

