கூகுள் ஜெமினி ப்ரோ இலவசம்.. ஜியோ கொடுத்த அதிரடி கிஃப்ட்.. பெறுவது எப்படி?
ரிலையன்ஸ் ஜியோ இளைஞர்களுக்கு கூகுளின் ஜெமினி ப்ரோ AI சேவையை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. இந்த சலுகையில் அன்லிமிடெட் AI சாட் மற்றும் 2TB கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற அம்சங்கள் அடங்கும்.

ஜியோ ஜெமினி ப்ரோ இலவசம்
ரிலையன்ஸ் ஜியோ இன்று (அக்டோபர் 30, 2025) முதல் ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. கூகுளின் செயற்கை நுண்ணறிவு உதவியாளரான ஜெமினி ப்ரோ (ஜெமினி ப்ரோ) சேவையை ஜியோ பயனர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப் போவதாக தெரிவித்துள்ளது. இந்த திட்டம் குறிப்பாக இளம் தலைமுறையை இலக்காக கொண்டது.
ஜியோ புதிய ஆஃபர்
இந்த ஜெமினி ப்ரோ AI சேவையை 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மட்டுமே இலவசமாகப் பெற முடியும். மேலும், அவர்களிடம் ஜியோ அன்லிமிடெட் 5G திட்டம் செயலில் இருக்க வேண்டும். ரூ.35,100 மதிப்புள்ள இந்த சேவையில் அன்லிமிடெட் AI சாட், 2TB கிளவுட் ஸ்டோரேஜ், வீடியோ உருவாக்கம் செய்யும் Veo 3.1, மற்றும் புகைப்படங்களை உருவாக்கும் Nano Banana தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும்.
ஜெமினி ப்ரோ அம்சங்கள்
ஜியோவின் கூற்று படி, இன்றைய இந்தியாவின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது. அவர்களின் புதுமைத் திறனை ஊக்குவிக்க "யங் இந்தியா முன்முயற்சி" திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜெமினி ப்ரோ இலவச சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.349 திட்டத்தில் 5G இணைப்பைப் பெற்றிருக்கும் பயனர்கள் இதனை 18 மாதங்கள் வரை இலவசமாகப் பயன்படுத்தலாம்.
ஆஃபரை எப்படிப் பெறலாம்?
MyJio செயலி மூலமாக இந்த ஆஃபரை எளிதாக ஆக்டிவேட் செய்யலாம். ஒருமுறை செயல்படுத்திய பின், பயனர்கள் 18 மாதங்கள் ஜெமினி புரோ AI சேவையை இலவசமாகப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு jio.com தளத்தைப் பார்க்கலாம். இளைஞர்களுக்கான இந்த டிஜிட்டல் முயற்சி, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு ஆப் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

