ரூ.51 மட்டுமே! மாதம் முழுக்க 5G டேட்டா – ஜியோவின் புது சலுகை சூப்பரா இருக்கு!
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.51-ல் அன்லிமிடெட் 5G டேட்டா பிளான் அறிமுகம். 3ஜிபி 4G டேட்டாவுடன் அன்லிமிடெட் 5G டேட்டாவும் கிடைக்கும். இந்த புதிய திட்டத்தை பற்றி முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

ஜியோ ரூ.51 பிளான்
ஜியோ வாடிக்கையாளர்களுக்காக புதிதாக ரூ.51 பிளான் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிளான் மூலம், மாதம் முழுவதும் அன்லிமிடெட் 5G டேட்டா பயன்படுத்தலாம். இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு டெலிகாம் நெட்வொர்க் இந்த மாதிரியான சலுகையை இந்த விலையில் தருவது இதுதான். ஜியோ 5G நெட்வொர்க் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் 5G ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் இந்த சலுகையால் அதிகம் பயனடையலாம்.
அன்லிமிடெட் 5ஜி டேட்டா
இந்த பிளான் 3ஜிபி அளவிலான 4ஜி ஹைஸ்பீட் டேட்டாவை வழங்குகிறது. அதோடு, அன்லிமிடெட் 5G டேட்டாவும் வருகிறது. இந்த பிளான், 1.5GB தினசரி டேட்டா கொண்ட ஏதேனும் ஒரு பிளான் இருந்தால் வேலை செய்யும். இதன் செல்லுபடியாகும் காலம் ஒரு மாதம். அதிக விலை இல்லாமல் அதிக பயன்பாடு வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது சரியான தேர்வாக இருக்கும்.
ஜியோ 5ஜி சலுகை
ஜியோவின் ரூ.101 பிளான் மூலம் 6ஜிபி ஹைஸ்பீட் டேட்டாவுடன் அன்லிமிடெட் 5ஜி வசதி கிடைக்கும். இது 1GB தினசரி டேட்டா பிளான்களுக்கு பொருந்தும். ரூ.151 பிளானில் 9ஜிபி ஹைஸ்பீட் டேட்டாவுடன் அன்லிமிடெட் 5ஜி கிடைக்கும். இது 1.5GB தினசரி டேட்டா பிளான்களுடன் 2 மாதம் வரை செல்லுபடியாகும். இந்த இரண்டும் டேட்டா முடிந்த பின் 64Kbps வேகத்தில்தான் இயங்கும்.
ஜியோ ரூ.51 ரீசார்ஜ்
கடந்த மாதம் ஜியோ வெளியிட்டது ரூ.198 ப்ரீபெய்ட் பிளானில், தினமும் 2ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் கால் வசதி, JioTV, JioAICloud போன்றவை சேவைகள் உள்ளன. இதன் செல்லுபடியாகும் காலம் 14 நாட்கள். இந்த பிளானிலும் அன்லிமிடெட் 5G டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ டேட்டா பிளான்
5G போன் வைத்திருக்கிறீர்கள், ஜியோ சிம் உங்களிடம் உள்ளது என்றால் இந்த சலுகையை தவற விடாதீர்கள். ரூ.51 என்ற குறைந்த தொகையில் மாதம் முழுவதும் 5G வேகத்தில் இன்டர்நெட் பயன்படுத்தலாம். இந்த சலுகை தற்போது டேட்டா அதிகம் தேவைப்படும் காலத்திலேயே வருவதால், அனைவரும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

