ஏர்டெல் ரூ.100 ரீசார்ஜ்: 30 நாட்கள் வேலிடிட்டி, ஹாட்ஸ்டார் சலுகை இருக்கு
தொலைத்தொடர்பு துறையில் கடும் போட்டி நிலவும் சூழலில், வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு திட்டங்களை நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. குறிப்பாக இணைய பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இணைய பயனர்களுக்கென சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன.

இணைய பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன. குறிப்பாக ஓடிடி தளங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், ஓடிடி சலுகையுடன் கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன.
Airtel ₹100 plan
ஏர்டெல் பட்ஜெட் பிளான்
இந்த வகையில், ஏர்டெல் ஒரு சிறந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த செலவில் அதிக நாட்கள் ஜியோ சினிமா சலுகையைப் பெறும் இந்த திட்டத்தின் முழு விவரங்கள் இங்கே. ஏர்டெல்லின் ரூ.100 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.
5GB data
5 ஜிபி அதிவேக டேட்டா
இதனுடன் 5 ஜிபி அதிவேக டேட்டாவும் கிடைக்கும். இதில் டாக் டைம் கிடையாது. இது டேட்டா வவுச்சர் மட்டுமே. எஸ்எம்எஸ் சலுகையும் கிடையாது. மேலும், இந்த திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் ஜியோ சினிமா சலுகையும் கிடைக்கும்.
Hotstar Access
ஐபிஎல் ரசிகர்களுக்கான திட்டம்
இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டுமென்றால், ஏற்கனவே ஒரு ஆக்டிவ் திட்டம் இருக்க வேண்டும். இது டேட்டா வவுச்சராக மட்டுமே செயல்படும். ஐபிஎல் ரசிகர்களை கவரும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் டேட்டாவுடன் ஜியோ சினிமா சலுகையையும் இலவசமாகப் பெறலாம்.
30 days validity
ஹாட்ஸ்டார் சலுகை
ஏற்கனவே வைஃபை இணைப்பு உள்ளவர்களுக்கும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். டேட்டாவுடன் ஹாட்ஸ்டார் சலுகையையும் பெறலாம்.
ரூ.5000-க்குள் கிடைக்கும் அசத்தலான ஏர் கூலர்கள்; லிஸ்ட் இங்கே!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.