MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தொடர் விடுமுறை! போக்குவரத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

தொடர் விடுமுறை! போக்குவரத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

வார இறுதி மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 1,739 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

1 Min read
Author : vinoth kumar
Published : May 23 2025, 10:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
Image Credit : our own

சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

வார இறுதி நாட்கள் மற்றும் பவுர்ணமி, அமாவாசை, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் பயணிகள் சிரமின்றி சொந்த ஊர் செல்ல ஏதுவாக தமிழக போக்குவரத்துத்துறை கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வார விடுமுறை முகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.

24
தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு
Image Credit : our own

தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு

இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிவிப்பில்: இன்று முகூர்த்த நாள், நாளை (சனிக்கிழமை) மற்றும் 25ம் தேதி (ஞாயிறுக்கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என்பதால் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி விபத்தில் சிக்கி உயிரிழந்தது எப்படி? வெளியான பரபரப்பு தகவல்!
Related image2
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்படும் இடங்கள் எவை? வெளியான லிஸ்ட்!
34
வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,739 சிறப்பு பேருந்துகள்
Image Credit : our own

வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,739 சிறப்பு பேருந்துகள்

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 570 பேருந்துகளும், சனிக்கிழமை 605 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 100 பேருந்துகளும், நாளை 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

44
மொபைல் செயலி மூலம் முன்பதிவு
Image Credit : our own

மொபைல் செயலி மூலம் முன்பதிவு

மாதவரத்திலிருந்து இன்று 24 பேருந்துகளும், நாளை 100 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி
விடுமுறை
விடுமுறைக்கால சிறப்பு பேருந்து
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி விபத்தில் சிக்கி உயிரிழந்தது எப்படி? வெளியான பரபரப்பு தகவல்!
Recommended image2
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்படும் இடங்கள் எவை? வெளியான லிஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved