MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ப்ளீஸ்! தவெக மதுரை மாநாட்டிற்கு இவர்கள் யாரும் வர வேண்டாம்! விஜய் வேண்டுகோள்!

ப்ளீஸ்! தவெக மதுரை மாநாட்டிற்கு இவர்கள் யாரும் வர வேண்டாம்! விஜய் வேண்டுகோள்!

த.வெ.க. 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் 21ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. வரும் தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபிக்கப்போவதாகவும், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் மாநாட்டை வீட்டில் இருந்தே காணுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Aug 18 2025, 11:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தவெக 2 வது மாநில மாநாடு
Image Credit : x/@TVKPartyHQ

தவெக 2-வது மாநில மாநாடு

தவெக 2-வது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 21ம் தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்காக காவல்துறை அனுமதி கொடுத்த நிலையில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் மகத்தான மக்கள் அரசியல் இயக்கமான த.வெ.க. மீதான தமிழ்நாட்டு மக்களின் பேரன்பும் பேராதரவும், தேர்தல் களத்தில் விரைவில் நிரூபிக்கப்படப்போகிறது. விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தல் அரசியல் களத்தில் தங்களுடைய பலத்தை நிரூபிக்க போகிறது. நமது கனவு நனவாக இலக்கை எட்ட புரட்டிப் போடப் போகும் புரட்சி நிகழ இன்னும் சில மாதங்களே உள்ளன.

25
மாபெரும் மக்கள் சக்தி
Image Credit : x/@TVKPartyHQ

மாபெரும் மக்கள் சக்தி

1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவுகளை, 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இந்த மண்ணில் காணப் போகிறோம். மாபெரும் மக்கள் சக்தியான நீங்கள். இந்தத் திருப்புமுனைத் தருணத்தை நிரூபிக்கப் போவது நிச்சயம். இதை 32 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் இயக்கமாக இருந்து, தினம் தினம் மக்கள் மனம் அறிந்து உணர்ந்து வரும் நாம் சொல்வதில் அடர்ந்த, ஆழ்ந்த உண்மை இருப்பதை அனைவரும் அறியத்தான் போகின்றனர்.

Related Articles

Related image1
காலையிலேயே சென்னையில் அதிர்ச்சி! 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி ரெய்டு! இதுதான் காரணமா?
Related image2
ஆஹா சூப்பர் அப்டேட்! மழையை அனுபவியுங்கள்! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்!
35
கர்ப்பிணிப் பெண்கள்
Image Credit : our own

கர்ப்பிணிப் பெண்கள்

தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் இந்த விஜய் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். உங்கள் மீதான உள்ளன்பு மிக்க அக்கறையின் காரணமாக இப்போது ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். கர்ப்பிணிப் பெண்கள் கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள். உடல்நலம் குன்றியோர். பள்ளிச் சிறார்கள். மாற்றுத் திறனாளிகள் ஆகியோர். நம் கழக மாநாட்டை வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு உரிமை கலந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

45
ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும்
Image Credit : x/@TVKPartyHQ

ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும்

மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்குத் திரும்பும்போதும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம், தகுதியும் பொறுப்பும் மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை.

55
தேர்தல் அரசியல் போர்
Image Credit : our own

தேர்தல் அரசியல் போர்

மக்கள் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட 'மனசாட்சி உள்ள மக்களாட்சி' என்னும் உன்னதமான அரசியல் அதிகார இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிக்கிறோம். மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் நம் தமிழ்நாட்டு மண்ணில், நம்மால் நிகழப் போவது நிஜம். எனவே, அத்தகைய மாபெரும் அரசியல் விளைவை நிச்சயமாக நிகழ்த்திக் காட்டும் பேரறிவிப்பாக நமது மாநில மாநாட்டை மாற்றிக் காட்டுவோம். உங்கள் ஒவ்வொருவருக்காகவும் உணர்வு ததும்பும் மதுரை மண்ணில், இதயம் திறந்து இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன். மதுரை பாரப்பத்தியில் கூடுவோம். உங்கள் விஜய், உரிமையுடன் அழைக்கிறேன். தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
டிவி.கே. விஜய்
தமிழக வெற்றி கழகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
காலையிலேயே சென்னையில் அதிர்ச்சி! 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி ரெய்டு! இதுதான் காரணமா?
Recommended image2
ஆஹா சூப்பர் அப்டேட்! மழையை அனுபவியுங்கள்! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved