MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சினிமா பாணியில் பயங்கரம்! தவாக மாவட்ட செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை! பழிக்குப் பழியா?

சினிமா பாணியில் பயங்கரம்! தவாக மாவட்ட செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை! பழிக்குப் பழியா?

காரைக்கால் மாவட்ட தவாக செயலாளர் மணிமாறன் மயிலாடுதுறையில் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். காரில் வந்த மர்ம கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 05 2025, 09:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
Image Credit : Google

தமிழக வாழ்வுரிமைக் கட்சி

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (32). இவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று காலை மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தவாக கட்சி கூட்டத்தில் பங்கேற்று விட்டு காரில் காரைக்​கால் நோக்​கிச் சென்று கொண்​டிருந்​தார். அப்போது செம்பனார் கோயில் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு எதிரே சென்று கொண்டிருந்த போது இரு கார்களில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் மணிமாறன் சென்ற காரை வழி மறித்துள்ளனர்.

25
ஓட ஓட விரட்டி படுகொலை
Image Credit : Google

ஓட ஓட விரட்டி படுகொலை

பின்னர் பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய அந்த கும்பல் காரின் முன்புற கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மணிமாறன் காரில் இருந்து இறங்கி சாலையில் ஓடியுள்ளார். ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். தலை மற்றும் முகம் சிதைந்த மணிமாறன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து வந்த காரிலேயே தப்பித்து சென்றது.

Related Articles

Related image1
அமமுக முக்கிய பிரமுகர் அதிமுகவில் ஐக்கியம்! அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்!
Related image2
ஜூலை 7ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!
35
5 தனிப்படைகள் அமைப்பு
Image Credit : our own

5 தனிப்படைகள் அமைப்பு

இந்த சம்பவம் தொடர்பாக செம்பனார்கோயில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மணிமாறன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டனர்.

45
பழிக்கு பழி
Image Credit : Google

பழிக்கு பழி

கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி காரைக்​கால் மாவட்ட பாமக செய​லா​ள​ராக இருந்த தேவ​மணி என்​பவர் வெட்​டிக் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் மணி​மாறன் முதல் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை வழக்கில் ஜாமீனில் வந்த நிலையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடைபெற்றதா அல்​லது வேறு காரணம் உள்​ளதா என்​பது குறித்து போலீ​சார் விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர். பட்டப்பகலில் தவாக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

55
வேல்முருகன்
Image Credit : our own

வேல்முருகன்

இந்த சம்பவத்திற்கு தவாக தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். மணிமாறன் மறைவுக்கு காரணமான, கூலிப்படையை விரைந்து கைது செய்து, அக்கும்பலுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. மணிமாறன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கொலை
அரசியல்
தமிழ்நாடு
குற்றம்
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
அமமுக முக்கிய பிரமுகர் அதிமுகவில் ஐக்கியம்! அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்!
Recommended image2
ஜூலை 7ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved