MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பாஜக காலில் திமுக விழும்.. 10 முறை தோல்வி அடைந்த சேலத்துக்காரர் இபிஎஸ்க்கு சவால் விட்ட விஜய்!

பாஜக காலில் திமுக விழும்.. 10 முறை தோல்வி அடைந்த சேலத்துக்காரர் இபிஎஸ்க்கு சவால் விட்ட விஜய்!

கட்சியை காப்பாற்ற பாஜக காலில் திமுக விழும். கட்சியை காப்பாற்ற மோடி, அமித்ஷா காலில் திமுக விழுகிறதா? இல்லையா? என்று பாருங்கள். எம்மதமும் நம்மதம் என்பது தான் விஜய்யின் முகம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 21 2026, 05:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் இதுவரை ஆளும் திமுக அரசை விமர்சித்து வந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடினார். அதாவது மிக மிக முக்கியமான நேரத்தில் நாம் இருக்கிறோம். மக்களை கண்டு கொள்ளாத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பப்போகும் தேர்தலின் கடைசி பிரசாரம். ஸ்டாலின் சாரை வீட்டுக்கு அனுப்பப்போகும் தேர்தலின் கடைசி பிரசாரம். ஸ்டாலின் சாரிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றியே ஆக வேண்டும். வரும் தேர்தலில் திமுக ஆட்சி கதம் கதம். மக்களை கண்டுகொள்ளாத நபர்களை வீட்டுக்கு அனுப்பாமல் கோட்டைக்கா அனுப்புவார்கள்? எத்தனை எத்தனை பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டு அவரின் வாழ்க்கையை உயரத்தினார். தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் வாங்காத அளவுக்கு கடன் வாங்கி, கடன் சுமையை உயர்த்தி உள்ளனர். வீட்டுசரி, குடிநீர் வரி, தொழில் வரி, விலைவாசி உயர்த்திவிட்டார்.

25
Image Credit : Asianet News

கருத்து கணிப்பு என்ற பெயரில் கடுப்பில் கணிப்புகளை வெளியிடுகின்றனர். திமுக 300 சீட்டு, 200 சீட்டு என்று கடுப்பில் கருத்துக் கணிப்புகளை வெளியிடுகின்றனர். இந்த தேர்தலில் திமுகவின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று சொல்கிறேன். கட்சியை காப்பாற்ற பாஜக காலில் திமுக விழும். கட்சியை காப்பாற்ற மோடி, அமித்ஷா காலில் திமுக விழுகிறதா? இல்லையா? என்று பாருங்கள். பாஜகவின் அடிமை யார் என்பதில் தான் திமுக, அதிமுக இடையே போட்டி. நமது அரசியல் எதிரி திமுக, கொள்ளை எதிரி பாஜக என்ற நிலையில் இருந்து இதுவரை மாறவில்லை.

Related Articles

Related image1
மூன்று நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் துள்ளிக்குதிக்கும் கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்கள்!
Related image2
'யாருக்கும் அஞ்சமாட்டேன், விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க!' - கடைசி நாள் பிரச்சாரத்தில் விஜய் உருக்கம்
35
Image Credit : X

ஒரு பக்கம் கதர் வேடம், மறுபக்கம் காவி வேடம், பாஜகவுடன் மறைமுகக் கூட்டணி என நான் அன்றே கூறியதை தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்பது அவர்களின் வழிபாட்டு முறை. மதசார்பற்ற சமூக நீதிக் கொள்கையில் இருந்து மாற மாட்டோம். இந்த விஷயத்தில் 100 சதவிகிதம் விஜய்யை நம்பலாம். எம்மதமும் நம்மதம் என்பது தான் விஜய்யின் முகம்.

45
Image Credit : Google

ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் விஜய் வெளியே வரமாட்டார் என்று 10 முறை தோற்ற சேலத்துக்காரர் சொல்கிறார். உங்களால் சேலத்தை தாண்டி வேறு தொகுதியில் போட்டியிட முடியுமா? அதனை செய்துவிட்டு விஜய்யை பற்றி பேசுங்கள். சொந்த தொகுதியிலேயே தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் நம்முடைய சின்னத்தை திருடியவர் எடப்பாடி பழனிசாமி. அதன் காரணமாகவே சுயேட்சை வேட்பாளரின் சின்னத்தை நமது சின்னமாக அரவணைத்திருக்கிறோம். அவர் நமக்காக மக்கள் மன்றத்தில் பணியாற்றியவர் தான். அதனால் எடப்பாடி தொகுதியில் மட்டும் தவெகவின் டிவி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக எல்லாரும் சேர்ந்து ஒருவனை எதிர்க்க காரணம், எல்லாரும் ஒரே கூட்டணியில் உள்ளனர். வாகை சூடும் வரலாறு திரும்பப் போகும் தேர்தல் இது. இந்த தேர்தலில் 75 வருட பவள விழா பாப்பாவையும், 55 வருட பல்லாங்குழி பாப்பாவையும் தூக்கி எறிவோமா?

55
Image Credit : Asianet News

ஒவ்வொரு வீட்டில் இருக்கும், குட்டி நண்பா, நண்பிகளுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுக்கு பிடிச்ச விஜய் மாமாவுக்காக விஜய் மாமா ஜெயிப்பதற்காக, தமிழ்நாடு ஜெயிப்பதற்காக உங்களுடைய வீட்டில் இருக்கிற அம்மா, அப்பா, சித்தப்பா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா, ஓட்டு போடும் வயதில் இருக்கும் அண்ணா, அக்கா எல்லாரையும் விசில் சின்னத்துக்கு ஓட்டுபோட சொல்லுங்கள். கரூர் சம்பவத்தில் என் மீது பழியை போட்டனர் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
எடப்பாடி பழனிசாமி
மு. க. ஸ்டாலின்
டிவி.கே. விஜய்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
நாம நம்ம ஸ்டேண்டேலேயே இருக்கோம்.! அப்படியே இருப்போம்.! மக்கள் மத்தியில் பொங்கி எழுந்த விஜய்.!
Recommended image2
Now Playing
ஊழல் கட்சிகள் 2 பேரும் இனி வேண்டாம். திமுக, அதிமுகவை வீட்டுக்கு அனுப்புவோம் வெளுத்து வாங்கிய தளபதி.!
Recommended image3
சுட்டெரிக்கும் வெயிலுக்கு ரெஸ்ட்.. இந்த மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. வானிலை குளுகுளு அப்டேட்!
Related Stories
Recommended image1
மூன்று நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் துள்ளிக்குதிக்கும் கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்கள்!
Recommended image2
'யாருக்கும் அஞ்சமாட்டேன், விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க!' - கடைசி நாள் பிரச்சாரத்தில் விஜய் உருக்கம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved