MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தை பூசத்துக்கு ஊருக்கு போறீங்களா? பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!

தை பூசத்துக்கு ஊருக்கு போறீங்களா? பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

2 Min read
Author : Rayar r
Published : Jan 28 2026, 07:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
சிறப்பு பேருந்துகள்
Image Credit : our own

சிறப்பு பேருந்துகள்

தை பூசம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜனவரி 30ம் தேதி (வெள்ளிக்கிழமை), ஜனவரி 31ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் பிப்ரவரி 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

23
திருச்சி, நாகர்கோவில்
Image Credit : Asianet News

திருச்சி, நாகர்கோவில்

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 30/01/2026 (வெள்ளிக்கிழமை) அன்று 360 பேருந்துகளும், 31/01/2026 (சனிக்கிழமை) 485 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூரு, கோவை

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 30/01/2026 வெள்ளிக் கிழமை அன்று 60 பேருந்துகளும் 31/01/2026 சனிக்கிழமை அன்று 60 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 30/01/2026 அன்று 20 பேருந்துகளும் 31/01/2026 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Related Articles

Related image1
பொங்கலுக்கு 6 நாட்கள் சிறப்பு பேருந்துகள்.. எந்தெந்த தேதியில் எத்தனை பேருந்துகள்? முழு விவரம்!
Related image2
பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை.. ஊருக்கு போறீங்களா? சிறப்பு பேருந்துகள் ரெடி.. முழு விவரம்!
33
சென்னைக்கு திரும்பவும் பேருந்துகள்
Image Credit : our own

சென்னைக்கு திரும்பவும் பேருந்துகள்

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 4,132 பயணிகளும் சனிக்கிழமை 4,175 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8,256 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

எப்படி முன்பதிவு செய்வது?

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். எனவே, இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டிஎன்எஸ்டிசி
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
பொங்கலுக்கு 6 நாட்கள் சிறப்பு பேருந்துகள்.. எந்தெந்த தேதியில் எத்தனை பேருந்துகள்? முழு விவரம்!
Recommended image2
பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை.. ஊருக்கு போறீங்களா? சிறப்பு பேருந்துகள் ரெடி.. முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved