- Home
- Tamil Nadu News
- தூத்துக்குடியில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படாது.. தெற்கு ரயில்வே அறிவிப்பு.. முழு விவரம்!
தூத்துக்குடியில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படாது.. தெற்கு ரயில்வே அறிவிப்பு.. முழு விவரம்!
மைசூரு – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்: 16236) டிசம்பர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி வாஞ்சி மணியாச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் வாஞ்சி மணியாச்சியுடன் நின்று விடும்.

ரயில் சேவையில் மாற்றம்
வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளிட்ட அறிவிப்பை கீழே காண்போம்.
சென்னை முத்து நகர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
* சென்னை எழும்பூர் – தூத்துக்குடி முத்து நகர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12693) ரயில்
டிசம்பர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் வாஞ்சி மணியாச்சி தூத்துக்குடி இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் வாஞ்சி மணியாச்சியுடன் நின்று விடும். தூத்துக்குடி செல்லாது.
* தூத்துக்குடி – சென்னை எழும்பூர் முத்து நகர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 12694) டிசம்பர் 21, 22, 23 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி வாஞ்சி மணியாச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் வழக்கமான நேரத்தில் (இரவு 9.10 மணி) வாஞ்சி மணியாச்சியில் இருந்து புறப்படும்.
மைசூரு – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில்
* மைசூரு – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்: 16236) டிசம்பர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி வாஞ்சி மணியாச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் வாஞ்சி மணியாச்சியுடன் நின்று விடும்.
* வண்டி எண் 16235 தூத்துக்குடி – மைசூரு எக்ஸ்பிரஸ் (வ.எண்:16235) டிசம்பர் 21, 22, 23 ஆகிய தேதிகளில் தூத்துக்குடிக்கும் வாஞ்சி மணியாச்சிக்கும் இடையில் பகுதியளவு இரத்து செய்யப்பட்டு, வாஞ்சி மணியாச்சியிலிருந்து வழக்கமான நேரத்தில் (மாலை 6 மணி) புறப்படும்.
தூத்துக்குடி பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ்
* பாலக்காடு – தூத்துக்குடி பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்: 16792) டிசம்பர் 14ம் தேதி முதல் ஜனவரி 27ம் தேதி வரை திருநெல்வேலிக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் பகுதியளவு இரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் பாலாக்காட்டில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலியுடன் நின்று விடும். தூத்துக்குடி செல்லாது.
* தூத்துக்குடி – பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் (வ.எண்: 16791) டிசம்பர் 15ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை தூத்துக்குடிக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் பகுதியளவு இரத்து செய்யப்பட்டுகிறது. இந்த ரயில் திருநெல்வேலியிலிருந்து அதன் வழக்கமான நேரத்தில் (இரவு 11 மணி) புறப்பட்டு பாலக்காடு செல்லும்.
மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ரயில்
*தூத்துக்குடியில் இருந்து டிசம்பர் 20ம் தேதி புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (வ.எண்:16766) தூத்துக்குடிக்கு மாற்றாக கோவில்பட்டியில் இருந்து அதன் வழக்கமான நேரத்தில் (இரவு 11.50 மணி) புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும். டிசம்பர் 21ம் தேதி மேட்டுப்பாளையம் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்: 16765) கோவில்பட்டியுடன் நின்று விடும். தூத்துக்குடி செல்லாது.
விவேக் எக்ஸ்பிரஸ்
* இதேபோல் ஓகா தூத்துக்குடி விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்: 19568) டிசம்பர் 19ம் தேதி கோவில்பட்டியுடன் நிண்று விடும். தூத்துக்குடி ஓகா விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்: 19567) டிசம்பர் 21ம் தேதி கோவில்பட்டியில் இருந்து அதன் வழக்கமான நேரத்தில் (நள்ளிரவு 12.30 மணி) புறப்பட்டு ஓகா செல்லும்.

