MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியானது! யார் யாருக்கு எப்போது எக்ஸாம்! முழு விவரம் இதோ!

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியானது! யார் யாருக்கு எப்போது எக்ஸாம்! முழு விவரம் இதோ!

தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும். தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 7 வரை காலாண்டு தேர்வு விடுமுறை.

3 Min read
Author : vinoth kumar
Published : Aug 28 2025, 09:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
காலாண்டு தேர்வு
Image Credit : Google

காலாண்டு தேர்வு

தமிழகத்தில் 2025-26ம் கல்வியாண்டிற்கான நாள்காட்டியில் 6 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 15ம் தொடங்கி 26ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்திருந்தது. அதன்படி 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15 தொடங்கி 26ம் தேதி வரையும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 10 முதல் 25ம் தேதி வரையும் தேர்வு நடைபெறும். இதனையடுத்து செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதி காலாண்டு தேர்வு விடுமுறை கிடைக்கிறது. இந்நிலையில் காலாண்டு தேர்வுக்கான கால அட்டவணை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

26
6 முதல் 8ம் வகுப்பு வரையிலான தேர்வு அட்டவணை
Image Credit : Google

6 முதல் 8ம் வகுப்பு வரையிலான தேர்வு அட்டவணை

6ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி தமிழ், 16ம் தேதி விருப்ப உடற்கல்வி, 17ம் தேதி ஆங்கிலம், 18ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 22ம் தேதி கணிதம், 24ம் தேதி அறிவியல், 25ம் தேதி சமூக அறிவியல். இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி 12 மணிக்கு முடிவடைகிறது.

7ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி தமிழ், 16ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 17ம் தேதி உடற்கல்வி, 18ம் தேதி ஆங்கிலம், 22ம் தேதி கணிதம், 24ம் தேதி அறிவியல், 25ம் தேதி சமூக அறிவியல். இந்த தேர்வுகள் அனைத்தும் மதியம் 2 மணிக்கு தொடங்கி 4 மணிக்கு முடிவடைகிறது.

8ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி தமிழ், 16ம் தேதி உடற்கல்வி, 17ம் தேதி ஆங்கிலம், 18ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 22ம் தேதி கணிதம், 24ம் தேதி அறிவியல், 25ம் தேதி சமூக அறிவியல். இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு முடிவடைகிறது.

Related Articles

Related image1
குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி! டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.!
Related image2
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ஆகஸ்ட் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!
36
10ம் வகுப்பு தேர்வு அட்டவணை
Image Credit : Google

10ம் வகுப்பு தேர்வு அட்டவணை

9ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி தமிழ், 16ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 17ம் தேதி உடற்கல்வி, 18ம் தேதி ஆங்கிலம், 22ம் தேதி கணிதம், 24ம் தேதி அறிவியல், 26ம் தேதி சமூக அறிவியல். இந்த தேர்வுகள் அனைத்தும் மதியம் 2 மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு முடிவடைகிறது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி தமிழ், 16ம் தேதி ஆங்கிலம், 17ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 22ம் தேதி கணிதம், 24ம் தேதி அறிவியல், 26ம் தேதி சமூக அறிவியல். இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணிக்கு முடிவடைகிறது.

46
11ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை
Image Credit : our own

11ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை

11ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 10ம் தேதி தமிழ், 11ம் தேதி ஆங்கிலம், 15ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் & புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம், 17ம் தேதி தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை), அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், 19ம் தேதி வேதியியல், கணக்கியல், புவியியல், 22ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள், 25ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் ​​& டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, நர்சிங் (பொது). இந்த தேர்வுகள் அனைத்தும் மதியம் 2 மணிக்கு தொடங்கி 5 மணிக்கு முடிவடைகிறது.

56
12ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை
Image Credit : our own

12ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை

12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 10ம் தேதி தமிழ், 11ம் தேதி ஆங்கிலம், 15ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் ​​& டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, நர்சிங் (பொது), 17ம் தேதி தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை) அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், 19ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள், 22ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் & புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம், 25ம் தேதி வேதியியல், கணக்கியல் புவியியல் . இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி1 மணிக்கு முடிவடைகிறது.

66
11 நாட்கள் விடுமுறை
Image Credit : Google

11 நாட்கள் விடுமுறை

செப்டம்பர் 27ம் தேதி சனி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை தொடங்கிவிடும். வழக்கமாக ஒரு வாரம் விடுமுறை கிடைக்கும் நிலையில் இம்முறை 11 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதில் ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் காந்தி ஜெயந்தி உள்ளிட்ட விடுமுறைகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தேர்வு
பள்ளி மாணவர்
பள்ளிகள் விடுமுறை
பள்ளிக் கல்வித் துறை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி! டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.!
Recommended image2
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ஆகஸ்ட் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved