MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பொதுமக்களுக்கு எச்சரிக்கை! இன்று முதல் ஜூலை 02 வரை! சென்னை வானிலை மையம் சொன்ன முக்கிய தகவல்!

பொதுமக்களுக்கு எச்சரிக்கை! இன்று முதல் ஜூலை 02 வரை! சென்னை வானிலை மையம் சொன்ன முக்கிய தகவல்!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஜூலை 6 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலை இயல்பை விட சற்று அதிகமாக இருக்கும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 30 2025, 05:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சென்னை வானிலை ஆய்வு மையம்
Image Credit : Google

சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 6ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் ஜூலை 1ம் தேதி நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

25
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
Image Credit : Google

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

ஜூலை 03 மற்றும் 04ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 05 மற்றும் 06ம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Related Articles

Related image1
300 சவரன் நகை! ரூ.70 லட்சத்தில் கார்! திருமணமான 78 நாட்களில்! வாட்ஸ் அப் ஆடியோவில் அதிர்ச்சி! நடந்தது என்ன?
Related image2
சென்னையில் மின்சாரப் பேருந்துகள் சேவை! இவ்வளவு சிறப்பம்சங்களா? எந்தெந்த பகுதிகளில் எத்தனை பேருந்துகள்!
35
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
Image Credit : our own

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

இன்று முதல் ஜூலை 02 வரை தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும்.

45
அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு
Image Credit : our own

அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு

இன்று முதல் ஜூலை 02 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதேபோல் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 – 3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

55
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
Image Credit : our own

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
மழை செய்திகள்
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
வெப்ப அலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
300 சவரன் நகை! ரூ.70 லட்சத்தில் கார்! திருமணமான 78 நாட்களில்! வாட்ஸ் அப் ஆடியோவில் அதிர்ச்சி! நடந்தது என்ன?
Recommended image2
சென்னையில் மின்சாரப் பேருந்துகள் சேவை! இவ்வளவு சிறப்பம்சங்களா? எந்தெந்த பகுதிகளில் எத்தனை பேருந்துகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved