காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
தமிழ்நாடு மின்சார வாரியம் மாதாந்திரப் பராமரிப்பு பணிகளுக்காக இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மின் விநியோகத்தை நிறுத்துகிறது. கோவை, மேட்டூர், விழுப்புரம் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் காலை முதல் மாலை வரை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாதாந்திரப் பராமரிப்பு பணி
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்ற விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
கோவை
கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம், யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சோமையம்பாளையம், அகர்வால் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, கே.என்.ஜி.புதூர், குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.
மேட்டூர்
தோப்பூர், சேகரப்பட்டி, காமம்பட்டி, எருமப்பட்டி, வெள்ளார், சோழியனூர், தீவட்டிப்பட்டி, மூக்கனூர், இலத்தூர், ஜோடுகுளி, குண்டுகால், தளவாய்பட்டி, கொண்டரெட்டியூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை பவர் கட் செய்யப்படும்.
பல்லடம்
தொட்டிபாளையம், கொடுவாய், வினோபா நகர், தெற்கு அவினாசிபாளையம், அண்ணாநகர், சேரன் நகர், தண்ணீர்பந்தல், கரைவலசு பகுதிகளில் காலை 9 முதல் இரவு 11 மணி வரை மின்தடை செய்யப்படும்.
தேனி
துரைசாமிபுரம், அப்பன்பட்டி, தென்பழனி, சீலையம்பட்டி, தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, காமாட்சிபுரம், ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணந்தொழு, அருகேவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
உடுமலைப்பேட்டை
அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.
விழுப்புரம்
தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மணந்தல், வடபாலை, ஈயங்குணம், கொடுக்கன்குப்பம், மேல்செவலபாடி, நாராயணமங்கலம், மேல்வைலாமூர், வளத்தி, அன்னமங்கலம், நீலம்பூண்டி, சித்திப்பட்டு, அத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லாண் பிள்ளை பெற்றாள் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

