MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பெண்களுக்கு குட்நியூஸ்.. தமிழ்நாடு அரசு கொடுக்கும் ரூ.75,000 பரிசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

பெண்களுக்கு குட்நியூஸ்.. தமிழ்நாடு அரசு கொடுக்கும் ரூ.75,000 பரிசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Kolam Competition: இது நம்ம ஆட்டம் 2026' முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா ஜனவரி 22 முதல் பிப்ரவரி 8 வரை நடைபெறுகிறது. ஊராட்சி, மாவட்ட, மற்றும் மாநில அளவில் நடைபெறும் இப்போட்டிகளுக்கு ரூ.20.48 கோடி பரிசுத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 10 2026, 11:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
 இது நம்ம ஆட்​டம் 2026
Image Credit : Asianet News

இது நம்ம ஆட்​டம் 2026

இளைய தலை​முறை​யினரின் உடல் மற்​றும் மன ஆரோக்​கி​யத்தை மேம்​படுத்​தும் வகை​யில் தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் சார்​பில், இது நம்ம ஆட்​டம் 2026 என்ற பெயரில் முதலமைச்சர் இளைஞர் விளை​யாட்​டுத் திரு​விழா தமிழகம் முழு​வதும் நடை​பெற உள்​ளது. அதன்​படி ஊராட்சி ஒன்​றி​யம், மாவட்​டம் மற்​றும் மாநில அளவில் இந்த விளை​யாட்டுத் திரு​விழா ஜனவரி 22 முதல் பிப்​ரவரி 8-ம் தேதி வரை நடத்​தப்​படு​கிறது. இதற்​கான இணை​யதள முன்​ப​திவை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார். இதற்​காக தமிழக அரசு மொத்​தம் ரூ.20.48 கோடியை பரிசுத்​தொகை​யாக ஒதுக்​கி​யுள்​ளது.

26
கோலப் போட்டிகள்
Image Credit : Asianet News

கோலப் போட்டிகள்

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் தடகளம் - 100 மீட்டர் மற்றும் குண்டு எறிதல், கபடி, வாலிபால், கேரம், கயிறு இழுத்தல் போட்டி, ஸ்ட்ரீட் கிரிக்கெட் மற்றும் எறிபந்து ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளது. மேலும், மாவட்ட அளவில் ஓவியம், கோலப் போட்டிகள் மற்றும் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும், பார்வைத்திறன் குறைபாடு மாற்றுத்திறனாளிகளுக்கு குண்டு எறிதல் போட்டியும், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும், காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும் என மாற்றுத்திறனாளிகளுக்கு 4 பிரிவுகளாகவும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

Related Articles

Related image1
பொங்கல் பரிசு.. ரூ.3000 ரொக்கம் இதுவரை எத்தனை லட்சம் பேருக்கு வழங்கல்.. சூப்பர் அப்டேட் கொடுத்த தமிழக அரசு!
Related image2
மக்களே உஷார்.. அடுத்த 3 மணிநேரம்.. தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை விடாமல் அடிச்சு ஊத்தப்போகுது?
36
மாநில அளவிலான போட்டிகள்
Image Credit : Asianet News

மாநில அளவிலான போட்டிகள்

மாவட்ட அளவில் முதலிடத்தை பெறும் பெண்களுக்கான கபடி அணி மற்றும் ஆண்களுக்கான ஸ்ட்ரீட் கிரிக்கெட் அணியினர்களுக்கு மட்டும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இது தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா "இது நம்ம ஆட்டம் 2026" போட்டிகளில் ஒன்றிய அளவிலான போட்டிகள் அந்த அந்த ஊராட்சி ஒன்றியங்களில் ஜனவரி 22 முதல் 25 வரை நடத்தப்படவுள்ளது. மாவட்ட அளவிலான போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜனவரி 30. முதல் பிப்ரவரி 01 வரை நடத்தப்படவுள்ளது. மாநில அளவிலான போட்டிகள் பிப்ரவரி 06 முதல் 08 வரை நடைபெறவுள்ளது.

46
முதல் பரிசு ரூ.75,000
Image Credit : our own

முதல் பரிசு ரூ.75,000

ஊராட்சி ஒன்றிய அளவில் தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் முதலிடம் பெறுபவருக்கு தலா ரூ.3,000, இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.2,000 மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.1,000 பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது. அதேபோல் மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.6,000, இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.4,000 மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.2,000 பரிசுத்தொகை வழங்கப்படுகிறது, மாநில அளவில் குழு போட்டியில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.75,000, இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.50,000 மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.25,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது.

56
முன்பதிவு செய்திட கடைசி நாள்
Image Credit : our own

முன்பதிவு செய்திட கடைசி நாள்

இப்போட்டிகளில் பங்கேற்க இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்திட கடைசி நாள் ஜனவரி 21 மாலை 5.00 மணி வரை. போட்டிகள் நடைபெறும் நாள் அன்று நேரடியாகவும் பதிவு செய்து பங்கேற்கலாம். (ஒன்றிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பவர்கள் அந்த அந்த ஒன்றியத்தில் வசிப்பதற்கான ஆதார் கார்டு / ரேஷன் கார்டு நகல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்).

66
சரியான ஆவணங்களை சமர்ப்பித்து முன்பதிவு
Image Credit : our own

சரியான ஆவணங்களை சமர்ப்பித்து முன்பதிவு

எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள பள்ளி / கல்லூரி மாணவ / மாணவியர்கள், மாற்றுத்திறனாளி வீரர் / வீராங்கனைகள், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் https://sdat.tn.gov.in அல்லது https://cmyouthfestival.sdat.in இணையதளத்தில் உள்ள போட்டிகளில் பங்கேற்பது குறித்தான முழு விவரங்கள் மற்றும் விதிமுறைகளை படித்து பிறகு சரியான பிரிவில் சரியான ஆவணங்களை சமர்ப்பித்து முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை 7401703461 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், அல்லது ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514 000 777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
போட்ரா வெடிய.. இனி 6ம் வகுப்பு முதல் இலவச லேப்டாப்..! முதல்வர் அதிரடி அறிவிப்பு
Recommended image2
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image3
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Related Stories
Recommended image1
பொங்கல் பரிசு.. ரூ.3000 ரொக்கம் இதுவரை எத்தனை லட்சம் பேருக்கு வழங்கல்.. சூப்பர் அப்டேட் கொடுத்த தமிழக அரசு!
Recommended image2
மக்களே உஷார்.. அடுத்த 3 மணிநேரம்.. தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை விடாமல் அடிச்சு ஊத்தப்போகுது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved