MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • லட்சம் லட்சமாய் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்.. 4 நாள் தான் டிரைனிங்! தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு

லட்சம் லட்சமாய் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்.. 4 நாள் தான் டிரைனிங்! தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு

சொந்தமாக பேக்கரி தொழில் தொடங்க விரும்புவோருக்காக சென்னையில் சிறப்பு பயிற்சி ஒன்றை அறிவித்துள்ளது. 4 நாள் பயிற்சியில், தினை வகைகளைக் கொண்டு பல்வேறு பேக்கரி பொருட்களைத் தயாரிப்பதுடன், சந்தைப்படுத்துதல் மற்றும் அரசு மானியங்கள் குறித்தும் விளக்கப்படும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 23 2026, 11:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழக அரசு
Image Credit : Google

தமிழக அரசு

ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் வேலை தேடி பல இடங்களுக்கு அலைந்து திரிகிறார்கள். அவர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. படித்த படிப்பிற்கு ஏற்ப வேலை வழங்கிட தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. சொந்த ஊரிலேயே வேலை கிடைத்திட அந்த அந்த மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி பல லட்சம் பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக சொந்த தொழில் தொடங்க திட்டமிடுபவர்களுக்காக பயிற்சியும் வழங்கி கடன் உதவிக்கான வழிகாட்டப்படுகிறது. அந்த வகையில் சொந்தமாக பேக்கரி ஷாக் தொடங்க திட்டமிடுபவர்களுக்காக அசத்தலான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

25
தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்
Image Credit : our own

தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 4 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 27.01.2026 முதல் 30.01.2026 தேதி வரை காலை 9.30 மணி முதல் மதியம் 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

Related Articles

Related image1
ஆட்டம் காணும் அமமுக.. டிடிவி.தினகரனின் வலது கரம் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்.. வெளியான அதிர்ச்சி காரணம்?
Related image2
நீயா நானா பாத்துடுவோம்.. தங்கம் ரூ.3600.. வெள்ளி ரூ.20,000 அதிகரிப்பு.. உயர்வுக்கு இதுதான் காரணமா?
35
தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல்
Image Credit : Getty

தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல்

இப்பயிற்சியில் பேக்கரி பொருட்களின் ராகி நெய் குக்கீகள் , சத்துமாவு குக்கீகள், கோதுமை தேங்காய் குக்கீகள், முத்து சோக்கோ தினை குக்கீகள் (கம்பு), கோடோ முந்திரி தினை குக்கீகள் (வரகு), சிறிய முந்திரி தினை குக்கீகள் (சாமை), சோளம் பிஸ்தா குக்கீகள் (சோலம்), பர்னார்ட் ஜீரா குக்கீகள் (குதிரைவாளி), மசாலா குக்கீகள், முழு கோதுமை ரொட்டி, பழ ரொட்டி, ராகி தினை ரொட்டி, பல தானிய ரொட்டி, ராகி சாக்கோ ரொட்டி, ராகி பிரவுனி, ​​குதிரைவாலி தினை பிரவுனி, ​​கருப்புகோவ்னி தினை பிரவுனி, ​​பல தினை வால்நட் பிரவுனி, ​​டேட்ஸ் தினை பிரவுனி, ​​கோதுமை பிளம் கேக், ராகி சாக்லேட் கேக், ஜோவர் கேரட் கேக் (Cholam Cake), ஃபாக்ஸ்டெயில் மற்றும் டேட்ஸ் கேக் (தினை), வாழைப்பழம் வால்நட் கேக், தினை வெல்லம் வெண்ணெய் கேக், முழு கோதுமை பீட்சா, முழு கோதுமை பூண்டு ரொட்டி, ராகி கருப்பு காடு கேக், பட்டர்கிரீம் ஃப்ரோஸ்டிங்குடன் தினை வெண்ணிலா கேக் வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள்.

45
குறைந்த வாடகையில் தங்கும் விடுதி
Image Credit : our own

குறைந்த வாடகையில் தங்கும் விடுதி

மேலும் தயாரிப்பு சந்தைப்படுத்துதலின் அம்சங்கள் பேக்கிங் லேபிளிங் மற்றும் அதற்காண விலை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும். இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

55
முகவரி விவரம்
Image Credit : our own

முகவரி விவரம்

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை– 600 032.8668102600 8754495254. இந்த பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம் எனவும், அரசு சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு
பயிற்சிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
ஆட்டம் காணும் அமமுக.. டிடிவி.தினகரனின் வலது கரம் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்.. வெளியான அதிர்ச்சி காரணம்?
Recommended image2
நீயா நானா பாத்துடுவோம்.. தங்கம் ரூ.3600.. வெள்ளி ரூ.20,000 அதிகரிப்பு.. உயர்வுக்கு இதுதான் காரணமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved