MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் விடாமல் கனமழை ஊத்தப்போகுதாம்.! வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் விடாமல் கனமழை ஊத்தப்போகுதாம்.! வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கோயம்புத்தூர், தேனி, தென்காசி, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை மற்றும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 02 2026, 03:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சென்னை வானிலை ஆய்வு மையம்
Image Credit : Google

சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நேற்று நீலகிரி மற்றும் தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், தேனி, தென்காசி, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

25
கனமழை எச்சரிக்கை
Image Credit : our own

கனமழை எச்சரிக்கை

இதன் காரணமாக இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம் மற்றும் புதுவையில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். கோயம்புத்தூர், தேனி, தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் மழை! உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி.. நாள் குறித்த வானிலை மையம்
Related image2
பழைய ஓய்வூதிய திட்டம்.. நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது.. குஷியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்!
35
லேசானது முதல் மிதமான மழை
Image Credit : our own

லேசானது முதல் மிதமான மழை

அதேபோல் நாளை தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம் மற்றும் புதுவையில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

45
டிசம்பர் 6ம் மழைக்கு வாய்ப்பு
Image Credit : our own

டிசம்பர் 6ம் மழைக்கு வாய்ப்பு

மேலும் ஜனவரி 04 முதல் 05 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம் மற்றும் புதுவையில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். டிசம்பர் 6ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுவையில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

55
சென்னை வானிலை அப்டேட்
Image Credit : Google

சென்னை வானிலை அப்டேட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கனமழை
தமிழ்நாடு மழை
மழை செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் மழை! உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி.. நாள் குறித்த வானிலை மையம்
Recommended image2
பழைய ஓய்வூதிய திட்டம்.. நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது.. குஷியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved