MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை! ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை! ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

School Education Department: தமிழகத்தில் பள்ளிகளுக்கு டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Dec 23 2025, 08:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை
Image Credit : our own

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. டிசம்பர் 23ம் தேதி அதாவது இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நாளை முதல் அரையாண்டு விடுமுறை தொடங்கும் நிலையில், விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

24
பள்ளிக்கல்வித்துறை
Image Credit : Google

பள்ளிக்கல்வித்துறை

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு டிசம்பர் 24ம் தேதி புதன் கிழமை முதல் ஜனவரி 4ம் தேதி ஞாயிற்று கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 5ம் தேதி திங்கட்கிழமை அன்று முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் . அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என அனைத்து பள்ளி தலைமையாசியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

Related Articles

Related image1
ஜனவரி 7ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
Related image2
மெழுகுவர்த்தி, டார்ச் லைட் தயாரா வச்சுக்கோங்க.. தமிழகம் முழுவதும் 5 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை.!
34
 சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது
Image Credit : our own

சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது

பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படுகிறது. மாணவர்கள் விடுமுறை நாட்களில் கடல் , ஆறு , ஏரி , குளம் மற்றும் குட்டைபோன்ற நீர் நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம். மாணவர்களின் வளர்ச்சிக்கு சமர்ச்சீரான உணவு அளிப்பது அவசியம். இசை , நடனம் மற்றும் ஒவியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் இவற்றை கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும்.

44
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
Image Credit : our own

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

தாத்தா பாட்டி உள்ள வீடுகளில் சேர்ந்து உணவு அருந்த ஊக்குவிக்கவும். மேலும் பெரியோர்களை மதிக்கவும் அவர்களுக்கு உதவி செய்யவும் பழக்குங்கள். அனைத்து பள்ளி தலைமையாசிரிகளும் மேற்கண்ட அறிவுரைகளை மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
பள்ளிக் கல்வித் துறை
விடுமுறை
பள்ளிகள் விடுமுறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
ஜனவரி 7ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
Recommended image2
மெழுகுவர்த்தி, டார்ச் லைட் தயாரா வச்சுக்கோங்க.. தமிழகம் முழுவதும் 5 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved