MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு! போக்குவரத்து துறை சொன்ன குட் நியூஸ்!

இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு! போக்குவரத்து துறை சொன்ன குட் நியூஸ்!

வார இறுதி, முகூர்த்த நாட்களை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. சென்னை, கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட இடங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 09 2025, 06:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தொடர் விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள்
Image Credit : our own

தொடர் விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள்

வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள், பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் தமிழக போக்குவரத்துத்துறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பயணிகள் சொந்த ஊர் செல்லவும் ஆன்மிக தலங்களுக்கு செல்லவும் சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

26
போக்குவரத்துக் கழகம்
Image Credit : our own

போக்குவரத்துக் கழகம்

இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: ஜூலை 11 வெள்ளிக்கிழமை, ஜூலை 12 சனிக்கிழமை, ஜூலை 13 ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Related image1
எல்லாரும் ராஜினாமா செய்யுங்கள்! யாராக இருந்தாலும் பதவியை பறிப்பேன்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
Related image2
பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் திடீர் திருப்பம்! வேன் ஓட்டுநர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
36
சிறப்பு பேருந்துகள்
Image Credit : our own

சிறப்பு பேருந்துகள்

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூலை 11 (வெள்ளிக்கிழமை) அன்று 360 பேருந்துகளும், ஜூலை 12 (சனிக்கிழமை) 415 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

46
பயணிகளின் கவனத்திற்கு
Image Credit : our own

பயணிகளின் கவனத்திற்கு

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஜூலை 11 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் ஜூலை 12 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து ஜூலை 11 மற்றும் 12 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

56
 கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முன்பதிவு
Image Credit : our own

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முன்பதிவு

மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 8,374 பயணிகளும் சனிக்கிழமை 3,312 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8,319 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

66
சிறப்பு பேருந்து கண்காணிக்க அலுவலர்கள்
Image Credit : our own

சிறப்பு பேருந்து கண்காணிக்க அலுவலர்கள்

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே. பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
சென்னை
பள்ளி மாணவர்
அரசு ஊழியர்கள்
விடுமுறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
எல்லாரும் ராஜினாமா செய்யுங்கள்! யாராக இருந்தாலும் பதவியை பறிப்பேன்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
Recommended image2
பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் திடீர் திருப்பம்! வேன் ஓட்டுநர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved