MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆடிபெருக்கு, 2 நாள் தொடர் விடுமுறை.! பொதுமக்களுக்கு அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை

ஆடிபெருக்கு, 2 நாள் தொடர் விடுமுறை.! பொதுமக்களுக்கு அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை

ஆடிப்பெருக்கு மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Jul 30 2025, 07:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வார விடுமுறை கொண்டாட்டம்
Image Credit : our own

வார விடுமுறை கொண்டாட்டம்

இயந்திர வாழ்க்கைக்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு வார விடுமுறை ஓய்வு அளிக்க கூடிய நாளாக உள்ளது. அந்த வகையில் வார இறுதி நாள் விடுமுறையையொட்டி வெளியூர்களுக்கு பயணம்செய்ய பொதுமக்கள் திட்டமிடுவார்கள். அந்த வகையில் ஆடிபெருக்கு (ஆடி-18) மற்றும் வார இறுதி நாட்கள் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

 இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 01/08/2025 (வெள்ளிக்கிழமை) 02/08/2025 (சனிக்கிழமை) மற்றும் 03/08/2025 (ஞாயிறுக் கிழமை) ஆடிபெருக்கு(ஆடி-18) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

24
ஆடிபெருக்கு சிறப்பு பேருந்து
Image Credit : our own

ஆடிபெருக்கு சிறப்பு பேருந்து

இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 01/08/2025 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 02/08/2025 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் குறிப்பிட்ட இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும் பயணிகள் அதிகமாக கூடும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை. திருச்சி, கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வருகிற 01/08/2025 (வெள்ளிக்கிழமை) அன்றைந தினம் 340 பேருந்துகளும், 02/08/2025 (சனிக்கிழமை) 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
12 நாள் விடுமுறை.! குஷியான மாதமாகும் ஆகஸ்ட்- துள்ளி குதிக்கும் மாணவர்கள்
Related image2
மெட்ரோ ரயிலில் டிக்கெட்க்கு இவ்வளவு தள்ளுபடியா.? பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பு
34
சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்
Image Credit : our own

சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்

அடுத்ததாக பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 01/08/2025 அன்று 20 பேருந்துகளும் 02/08/2025 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

44
முன்பதிவு செய்து பயணியுங்கள்
Image Credit : our own

முன்பதிவு செய்து பயணியுங்கள்

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6,224 பயணிகளும் சனிக்கிழமை 2892 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6,695 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
விடுமுறைக்கால சிறப்பு பேருந்து
தமிழ்நாடு அரசு பேருந்து
விடுமுறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
12 நாள் விடுமுறை.! குஷியான மாதமாகும் ஆகஸ்ட்- துள்ளி குதிக்கும் மாணவர்கள்
Recommended image2
மெட்ரோ ரயிலில் டிக்கெட்க்கு இவ்வளவு தள்ளுபடியா.? பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved