MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • காலாண்டு தேர்வுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? குஷியில் துள்ளிக் குதித்து கொண்டாடும் பள்ளி மாணவர்கள்!

காலாண்டு தேர்வுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? குஷியில் துள்ளிக் குதித்து கொண்டாடும் பள்ளி மாணவர்கள்!

தமிழக பள்ளிகளுக்கு 2025-26 கல்வியாண்டின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 7 வரை காலாண்டு விடுமுறையும், டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை அரையாண்டு விடுமுறையும் வழங்கப்படும்.

1 Min read
Author : vinoth kumar
Published : Aug 26 2025, 08:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பள்ளி மாணவர்கள்
Image Credit : our own

பள்ளி மாணவர்கள்

பள்ளி விடுமுறை என்றாலே அளவில்லா சந்தோஷம் தான். அதவும் தொடர் விடுமுறை என்றால் சொல்லவா வேண்டும். இந்நிலையில் தமிழகம் முழுவதும் தொடக்க பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆண்டு பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2025-26க்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில் மொத்த 210 நாட்கள் பள்ளி வேலை நாட்களாகவும், அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ற சூப்பர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

24
பள்ளி மாணவர்கள் விடுமுறை
Image Credit : Google

பள்ளி மாணவர்கள் விடுமுறை

அதுமட்டுமல்லாமல் எந்தெந்த மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை மற்றும் காலாண்டு, அரையாண்டு எப்போது எத்தனை நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்பதை அமைச்சர் அன்பில் மகஷே் வெளியிட்டிருந்தார்.

Related Articles

Related image1
கோவை முதல் சென்னை வரை! இன்று காலை 9 மணி முதல் எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம் மின்தடை?
Related image2
ஆசிரியர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! இனி அவ்வளவுதான்! செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை!
34
காலாண்டு தேர்வு
Image Credit : our own

காலாண்டு தேர்வு

அதில், காலாண்டு தேர்வு 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 18ம் தொடங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதி விடுமுறை கிடைக்கிறது. அதாவது காலாண்டு விடுமுறை மொத்தம் 11 நாட்கள் கிடைக்கிறது. இந்த 11 நாட்கள் விடுமுறையில் ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் காந்தி ஜெயந்தி உள்ளிட்ட விடுமுறைகள் அடங்கும்.

44
அரையாண்டு தேர்வு
Image Credit : our own

அரையாண்டு தேர்வு

அதேபோல் அரையாண்டு தேர்வு டிசம்பர் 15ம் தேதி தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. 24ம் தேதி முதல் ஜனவரி 4ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மொத்தம் 12 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை வருகிறது. இதில், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு வருகிறது. காலாண்டு தேர்வுக்கு 11 நாட்களும், அரையாண்டு தேர்வுக்கு 12 நாட்களும் விடுமுறை கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
தேர்வு
தமிழ்நாடு
பள்ளிக் கல்வித் துறை
விடுமுறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
கோவை முதல் சென்னை வரை! இன்று காலை 9 மணி முதல் எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம் மின்தடை?
Recommended image2
ஆசிரியர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! இனி அவ்வளவுதான்! செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved