MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னையில் வீடு தேடி வரும் ரேஷன் பொருள்..! எந்தெந்த இடங்கள்? எந்தெந்த தேதிகள்? முழு விவரம்!

சென்னையில் வீடு தேடி வரும் ரேஷன் பொருள்..! எந்தெந்த இடங்கள்? எந்தெந்த தேதிகள்? முழு விவரம்!

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் சென்னையில் வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கப்பட உள்ளது.

2 Min read
Author : Rayar r
Published : Sep 10 2025, 07:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ration Delivery For Senior Citizen
Image Credit : DH

Ration Delivery For Senior Citizen

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் நேரடியாக ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர். ஆனால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளால் ரேஷன் பொருட்களை நேரில் சென்று வாங்க முடியவில்லை. இதை கவனத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளில் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” திட்டத்தை கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.

24
வீடு தேடி வரும் ரேஷன் பொருள்
Image Credit : x/ ai image

வீடு தேடி வரும் ரேஷன் பொருள்

இந்த திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்தினாளிகளும், ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Related Articles

Related image1
அரிசி, பருப்பு, பாமாயில் எதுவா இருந்தாலும் வீட்டில் இருந்தே வாங்கலாம்! வீடு தேடி ரேஷன் திட்டம் இன்று தொடக்கம்
Related image2
அடி தூள்! வீடு தேடி வரும் ரேஷன் பொருள்! தேதி குறித்த தமிழ்நாடு அரசு! முழு விவரம் இதோ!
34
சென்னையில் வீடு தேடி வரும் ரேஷன் பொருள்
Image Credit : x/ ai image

சென்னையில் வீடு தேடி வரும் ரேஷன் பொருள்

இந்நிலையில், சென்னையில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னையில், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை மட்டுமே கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளுக்கே சென்று. செப்டம்பர் 2025 திங்களுக்கு 13.09.2025 முதல் 16.09.2025 முடிய பொது விநியோகத் திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது. சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளின் அறிவிப்புப் பலகையிலிருந்து விநியோகத் தேதியினை அறிந்து கொள்ளலாம். இத்திட்டத்தினை மேற்குறிப்பிட்ட பயனாளிகள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

44
எந்தெந்த இடங்கள்? எந்தெந்த பகுதிகள்?
Image Credit : Gemini AI

எந்தெந்த இடங்கள்? எந்தெந்த பகுதிகள்?

வ.எண் செப்டம்பர் 2025 திங்களில் முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம் செயல்படும் நாட்கள் சென்னை பெருநகராட்சி மண்டலம்: 13.09.2025, 14.09.2025 மற்றும் 15.09.2025 (மூன்று நாட்கள்) மாதவரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர். 13.09.2025, 14.09.2025, 15.09.2025 மற்றும் 16.09.2025 (நான்கு நாட்கள்) திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர், அம்பத்தூர். அண்ணா நகர் மற்றும் ஆலந்தூர்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
குடும்ப அட்டை
ரேஷன் கடை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
நெருங்கும் தேர்தல்.. டெண்டர்களை அள்ளி வீசும் திமுக..! டிடிவி தினகரன் ஆவேசம்
Recommended image2
கிடைத்தவரை வாரி சுருட்டும் திமுக.. அவசர அவசரமாக 50 குவாரிகள் ஏலம்.. விளாசும் அன்புமணி
Recommended image3
வெயிலுக்கு குட்பை.. 10 மாவட்டங்களில் பொளக்கப் போகும் மழை.. வானிலை மையத்தின் 'ஜில்' அப்டேட்!
Related Stories
Recommended image1
அரிசி, பருப்பு, பாமாயில் எதுவா இருந்தாலும் வீட்டில் இருந்தே வாங்கலாம்! வீடு தேடி ரேஷன் திட்டம் இன்று தொடக்கம்
Recommended image2
அடி தூள்! வீடு தேடி வரும் ரேஷன் பொருள்! தேதி குறித்த தமிழ்நாடு அரசு! முழு விவரம் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved