MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • போட்டி பொதுக்குழு.! அப்பாவுக்கு டப் கொடுக்கும் மகன்.! ராமதாஸ்- அன்புமணி மோதலால் சிதறும் பாமக

போட்டி பொதுக்குழு.! அப்பாவுக்கு டப் கொடுக்கும் மகன்.! ராமதாஸ்- அன்புமணி மோதலால் சிதறும் பாமக

பாமகவில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே அதிகார மோதல் தீவிரமடைந்துள்ளது. இருவரும் தனித்தனியே பொதுக்குழு கூட்டங்களை அறிவித்துள்ளதால், கட்சி நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Aug 02 2025, 09:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பாமகவும் தமிழக அரசியலும்
Image Credit : GOOGLE

பாமகவும் தமிழக அரசியலும்

தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் வட மாவட்டங்களில் செல்வாக்கு உள்ள கட்சி பாமக, நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் பாமகவுடன் கூட்டணி வைத்தால் வட மாவட்டங்களில் அதிக வாக்குகளை கைப்பற்றலாம். வெற்றியும் எளிதாக கிடைக்கும் என அரசியல் கட்சிகளின் நம்பிக்கையாக உள்ளது. 

அந்த வகையில் தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சியான பாமக தற்போது அதிகார மோதலால் தந்தை மகன் இடையே சிக்கி சிதறி வருகிறது. பல ஆண்டுகளாக தந்தை மகன் இடையே நடைபெற்று வந்த மோதல் கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது எதிரொலித்தது. அதிமுகவுடன் கூட்டணிக்கு ராமதாஸ் திட்டமிட்ட நிலையில் அன்புமணியோ பாஜகவோடு கூட்டணியை உறுதி செய்தார்.

25
ராமதாஸ்- அன்புமணி அதிகார மோதல்
Image Credit : Asianet News

ராமதாஸ்- அன்புமணி அதிகார மோதல்

நாடாளுமன்ற தேர்தலில் பாமக படு தோல்வி அடைந்த நிலையில், நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அனைவர் மத்தியிலும் ராமதாஸ்- அன்புமணி மோதல் வெளியே தெரிய தொடங்கியது. தனது பேரன் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக ராமதாஸ் நியமித்த நிலையில் இதற்கு மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். 

அடுத்ததாக தன்னை பார்க்க பனையூர் அலுவலகம் வரவும் என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து இரு தரப்பிலும் சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் மோதல் ஏற்பட்டது. பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி அறிவித்த ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார்.

Related Articles

Related image1
மகன் அன்புமணியுடன் மோதல்! டக்குனு ஸ்டாலினுக்கு போன் போட்ட ராமதாஸ்! தமிழக அரசியலில் பெரும் ட்விஸ்ட்!
Related image2
ரூ.15ஆயிரம் பரிசோதனை... முற்றிலும் இலவசம்.! இன்று முதல் வீடு தேடி வரப்போகுது- மிஸ் பண்ணாதீங்க
35
பாமக யாருக்கு சொந்தம்.?
Image Credit : Getty

பாமக யாருக்கு சொந்தம்.?

அடுத்ததாக பாமக யாருக்கு சொந்தம் என இரு தரப்பிலும் மோதிக்கொண்டனர். தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி முறையிட்டனர். அன்புமணிக்கு ஆதரவானவர்கள் ராமதாசும், ராமதாசுக்கு ஆதரவானவர்களை அன்புமணியும் அடுத்தடுத்து கட்சி மற்றும் பொறுப்பில் இருந்து நீக்கினர். 

இதனால் பாமக நிர்வாகள் எந்த பக்கம் செல்வது என தவித்து வந்தனர். இதனையடுத்து தங்களது செல்வாக்கை நிலைநாட்ட இருவரும் வட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்த நிலையில் தான் பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக பாமக தலைமை நிலை​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில்,

45
பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு
Image Credit : our own

பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு

பாமக நிறு​வனர் மற்​றும் தலை​வர் ராம​தாஸ் உத்தர​வுபடி, திண்​டிவனம் - புதுச்​சேரி செல்​லும் வழி​யில் உள்ள பட்​டானூர் சங்​கமித்ரா திருமண மண்​டபத்​தில் வருகிற ஆகஸ்ட் 17-ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டம் நடை​பெற உள்​ளது என தெரிவிக்கப்பட்டது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்​றிய, நகர நிர்​வாகி​கள் தவறாது கலந்​து​கொள்​ளு​மாறு கேட்​டுக்​கொள்​ளப்​படு​வதாக அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து போட்டியாக களத்தில் இறங்கிய அன்புமணி நீங்கள் 17ஆம் தேதி தானே பொதுக்குழு கூட்டம் நடத்துகிறீங்க நான் ஒரு வாரம் முன்னதாக ஆகஸ்ட் 9ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பை அன்புமணி வெளியிட்டார்.

55
தவிக்கும் பாமக நிவாகிகள்
Image Credit : our own

தவிக்கும் பாமக நிவாகிகள்

இது தொடர்பாக அன்புமணி மற்றும் பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் வெளியிட்ட அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 09.08.2025 (சனிக்கிழமை) காலை 11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃளுயன்ஸ் (Confluence) அரங்கில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பும் போட்டி பொதுக்குழு கூட்டம் நடத்தவுள்ளதால் எந்த பக்கம் செல்வது என தெரியாமல் பாமக நிர்வாகிகள் தவித்து வருகிறார்கள்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
அரசியல்
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
இராமதாஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மதுபிரியர்களுக்கு பேரிடி.. தமிழகம் முழுவதும் பிப்ரவரி 18 முதல் டாஸ்மாக் மூடல்.. காரணம் இதுதான்!
Recommended image2
நெருங்கும் தேர்தல்.. டெண்டர்களை அள்ளி வீசும் திமுக..! டிடிவி தினகரன் ஆவேசம்
Recommended image3
கிடைத்தவரை வாரி சுருட்டும் திமுக.. அவசர அவசரமாக 50 குவாரிகள் ஏலம்.. விளாசும் அன்புமணி
Related Stories
Recommended image1
மகன் அன்புமணியுடன் மோதல்! டக்குனு ஸ்டாலினுக்கு போன் போட்ட ராமதாஸ்! தமிழக அரசியலில் பெரும் ட்விஸ்ட்!
Recommended image2
ரூ.15ஆயிரம் பரிசோதனை... முற்றிலும் இலவசம்.! இன்று முதல் வீடு தேடி வரப்போகுது- மிஸ் பண்ணாதீங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved