MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • உறைபனி எச்சரிக்கை இடையே மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

உறைபனி எச்சரிக்கை இடையே மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழகத்தில் சில பகுதிகளில் உறைபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. ஜனவரி 25 அன்று திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 22 2026, 02:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வாட்டி வதைக்கும் குளிர்
Image Credit : Google

வாட்டி வதைக்கும் குளிர்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பொதுமக்களை நடுங்க வைக்கும் அளவுக்கு குளிர் வாட்டி வதைத்து வருகிறது. புறம் வெயிலும் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் மழை குறித்து சென்னை வானிலை மையம் முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது.

25
வறண்ட வானிலை
Image Credit : our own

வறண்ட வானிலை

அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதேபோல் நாளை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

Related Articles

Related image1
அரையாண்டு, பொங்கல் விடுமுறையை தொடர்ந்து மீண்டும் தொடர் விடுமுறை.. குஷியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள்!
Related image2
பள்ளி மாணவர்களே சும்மா புகுந்து விளையாடுங்க! பரிசுகளை அள்ளிட்டுபோங்க! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
35
 கனமழை எச்சரிக்கை
Image Credit : our own

கனமழை எச்சரிக்கை

ஜனவரி 24

கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜனவரி 25

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

45
உறைபனி எச்சரிக்கை
Image Credit : our own

உறைபனி எச்சரிக்கை

ஜனவரி 26

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

உறைபனி எச்சரிக்கை

இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

55
சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்
Image Credit : Google

சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
தமிழ்நாடு வானிலை அறிக்கை
கனமழை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
அரையாண்டு, பொங்கல் விடுமுறையை தொடர்ந்து மீண்டும் தொடர் விடுமுறை.. குஷியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள்!
Recommended image2
பள்ளி மாணவர்களே சும்மா புகுந்து விளையாடுங்க! பரிசுகளை அள்ளிட்டுபோங்க! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved