அடுத்த 3 மணி நேரம்! எந்தெந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போகுது தெரியுமா?
தென் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 15ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தென் மாவட்டம் மற்றும் வட மாவட்டங்கள் கனமழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் நிரம்பின. பின்னர் நவம்பர் மாதத்தில் போதிய மழை பெய்யவில்லை. இதனையடுத்து டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். அதன் பிறகு வறண்ட வானிலையே நிலவி வந்தாலும் கடுமையான குளிர் நிலவி வருவதால் காலை மற்றும் இரவு நேரத்தில் வெளியில் செல்வதற்கே பொதுமக்கள் அஞ்சு நடுங்குகின்றனர். இந்நிலையில் மழை குறித்து வானிலை மையம் முக்கிய அபடேட் கொடுத்துள்ளது.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் 17 முதல் 18ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.