MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தாக்கியவனை விட்டுட்டு! அடி வாங்கிய ஏர்போர்ட் மூர்த்தியை இரவோடு இரவாக வீடு புகுந்து அலேக்கா தூக்கிய போலீஸ்!

தாக்கியவனை விட்டுட்டு! அடி வாங்கிய ஏர்போர்ட் மூர்த்தியை இரவோடு இரவாக வீடு புகுந்து அலேக்கா தூக்கிய போலீஸ்!

ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் மீதான தாக்குதலைக் கண்டித்து பாமகவினர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றனர். அப்போது, விசிகவினர் மற்றும் பாமகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

2 Min read
Author : vinoth kumar
Published : Sep 08 2025, 09:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி தலைவராகவும், பாமக மாவட்ட செயலாளருமான ம.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். மேலும் வன்னியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளராகவும் உள்ளார். ராமதாஸின் தீவிர ஆதரவாளர். கடந்த 5ம் தேதி ஆதரவாளர்களுடன் பேரூராட்சி அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு காரில் வந்த 8 பேர் கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தியது. மேலும், நாட்டு வெடி குண்டுகளையும் வீசியது. இதில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் ம.க.ஸ்டாலின் அங்கிருந்து எப்படியோ எஸ்கேப்பாகி உயிர் தப்பினார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

24
Image Credit : Google

இந்நிலையில் ம.க.ஸ்டாலின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் விவகாரத்தில் டிஜிபி நேரடியாக தலையிட்டு இச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். ம.க. ஸ்டாலினுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவும், பாமக மாநில இணைப்பொதுச் செயலாளருமான அருள் தனது ஆதரவாளர்களுடன் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க திட்டமிட்டார்.

Related Articles

Related image1
தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க!
Related image2
செங்கோட்டையன் மட்டுமல்ல SP வேலுமணியை காலி செய்து! EPSஐ முடித்து கட்ட ஸ்கெட்ச்! சாதி வெறி பிடித்த நரி யார் தெரியுமா?
34
Image Credit : Asianet News

இவர்கள் வருகைக்காக புரட்சி தமிழகம் கட்சி தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி, டிஜிபி அலுவலக வாசலில் காத்திருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர், ஏர்போர்ட் மூர்த்தியிடம் தகராறு செய்தது மட்டுமல்லாமல் திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். செருப்பால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் சுதாரித்துக்கொண்டு எதிர் தாக்குதல் நடத்தியதால் விசிகவினர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலானது. இந்த சம்பவத்திற்கு அன்புமணி, அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

44
Image Credit : ANI

இதனிடையே ஏர்போர்ட் மூர்த்தி தான் வைத்திருந்த பாக்கெட் கத்தியால் தாக்கியதில் விசிக சேர்ந்த திலீபன் என்பவர் காயமடைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருதரப்பினரும் மாறி மாறி மெரீனா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார்களை அடுத்து மெரினா போலீசார் இரு தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்தனர். விசிக பிரமுகர் திலீபன் என்பவர் ஏர்போர்ட் மூர்த்தி ஆயுதங்கள் மூலம் தாக்கியதாக கொடுத்த புகாரின் பேரில் அவர் வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஏர்போர்ட் மூர்த்தி மீது ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
தொல். திருமாவளவன்
காவல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க!
Recommended image2
செங்கோட்டையன் மட்டுமல்ல SP வேலுமணியை காலி செய்து! EPSஐ முடித்து கட்ட ஸ்கெட்ச்! சாதி வெறி பிடித்த நரி யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved